எந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது என்ற குழப்பமா?.. டாப் 3 பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகள்

பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது நிபுணர்கள் கூறுகின்றனர். பங்குச் சந்தை குறித்து ஒன்றுமே தெரியாமல் நேரடியாக நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் ரிஸ்க் குறைவு.

பொதுவாக பரஸ்பர நிதி நிறுவனங்கள் அமைப்பில் மொத்தம் 40 வகையான பண்டுகள் உள்ளன. அதில் பங்குச் சார்ந்த பண்டுகள் 12, எனவே பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இந்த 12 பண்டுகளில் முதலீடு செய்யலாம்.

எந்த மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது என்ற குழப்பமா?.. டாப் 3 பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகள்

ஒரு முதலீட்டாளரால் இந்த பண்டுகளில் அனைத்திலும் முதலீடு செய்ய முடியாது மற்றும் அவசியமும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு பண்டுக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் இருக்கிறது. அதனால் நமக்கு தகுந்த பண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

அதாவது நீங்கள் எப்படி முதலீடு செய்ய போகிறீர்கள், காலம் மற்றும் எதிர்பார்க்கும் ஆதாயம் ஆகியவற்றை பொறுத்து உங்களுக்கு தகுந்த பண்டுகளை தேர்வு செய்து திட்டங்களில் முதலீடு செய்யலாம். அந்த வகையில் குறிப்பிட்ட சில பங்கு பண்டு வகைகளை பார்ப்போம்.

மிட்கேப் பண்டுகள் மற்றும் ஸ்மால்கேப் பண்டுகள்

மிட்கேப் பண்டுகளை காட்டிலும் ஸ்மால்கேப் பண்டுகள் அதிக இடர்பாடுகளை கொண்டவை. அதிக ரிஸ்க் இருந்தாலும் லாபமும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் எல்லா நேரமும் அதிக வருமானம் தர வேண்டிய அவசியமில்லை.

மற்ற பண்டுகளை காட்டிலும் ஸ்மால்கேப் பண்டுகளில் அதிக ஏற்ற இறக்கம் அல்லது நிலையற்றதாக இருக்கும். எனவே, மிட்கேப் பண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. ஸ்மால்கேப் பண்டுகளில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

இந்த வகை பண்டுகளில் உங்கள் பணத்தில் 30-35 சதவீதம் வரை மட்டுமே முதலீடு செய்யுங்கள். நல்ல ஆதாயம் பெற 5 முதல் 7 ஆண்டுகள் பொறுமையாக இருங்க.

ப்ளக்ஸிகேப் பண்டுகள்

ப்ளக்ஸிகேப் பண்டுகள் எந்த குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெவ்வேறு சந்தை மூலதன சந்தை மதிப்பு கொண்ட பங்குகள் முழுவதும் முதலீடு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளன. எ

னவே ப்ளக்சிகேப் பண்டு மேலாளருக்கு பண்டு போர்ட்போலியோவின் எந்த விகித்தையும் பெரிய,நடுத்தர மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில முதலீடு செய்ய சுதந்திரம் உள்ளது. இது இந்த பண்டுகளை ஒரு முழுமையான லார்ஜ்கேப் ஒதுக்கீடு மற்றும் முழுமையான மிட்-ஸ்மால்கேப் ஒதுக்கீட்டுக்கும் இடையிலான ஒரு நல்லதாக ஆக்குகிறது.

நீங்கள் ஒரு தீவிரமாக முதலீட்டாளராக இருந்தால் ப்ளக்ஸிகேப் பண்டுகளை வைத்திருப்பதும், லார்ஜ்கேப் பண்டுகளை தவிர்ப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. இருப்பினும் இரண்டையும் வைத்திருப்பது தவறில்லை.

செயலற்ற லார்ஜ் கேப் இன்டெக்ஸ் பண்டுகள்

ஒவ்வொரு விவேகமான நீண்டகால போர்ட்போலியோவும் லார்ஜ்கேப்களுக்கு சரியான ஒதுக்கீட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதனை சேர்ப்பதற்கு மிகச் சிறந்த வழி, லார்ஜ் கேப் இன்டெக்ஸ் பண்டுகள் தான். அதுவும் செயலற்ற லார்ஜ்கேப் இன்டெக்ஸ் பண்டுகள் சிறந்தது.

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளில் இன்டெக்ஸை முறியடிக்கும் ஆக்டிவ் லார்ஜ்கேப் பண்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே நிலையான செயல்திறன் இல்லாமை மற்றும் குறைந்த செலவுகள ஆகியவற்றின் காரணமாக முக்கிய லார்ஜ்கேப் முதலீட்டுக்கு இன்டெக்ஸ் பண்டு பயன்படுத்தலாம்.

லார்ஜ்கேப் ஒதுக்கீட்டிற்கு நிப்டி 50, நிப்டி 10 அல்லது சென்செக்ஸ் அடிப்படையிலான இன்டெக்ஸ் பண்டு பயன்படுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+