சென்னை: நீங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் உங்களது விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவது அல்லது மறுக்கப்படுவதற்கு உங்களது சிபில் ஸ்கோர் தான் அடிப்படை காரணமாக இருக்கும்.
நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும். ஆனால் மோசமான சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் கிடைப்பதற்கு அதுவே பெரிய தடையாக இருக்கக்கூடும்.

வங்கி மற்றும் கடன் அளிக்கும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்துக் கொடுக்கக்கூடிய ஒரு நிறுவனம்தான் சிபில். அதாவது கிரெடிட் இன்ஃபர்மேஷன் ப்யூரோ லிமிடெட் (credit information bureau (india) limited).
அனைத்து வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கியவர்களின் விவரங்களை சிவில் நிறுவனத்திற்கு கொடுத்து விடும். இந்த தரவுகளை சிவில் நிறுவனம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும். இதன் அடிப்படையில் தான் ஒருவர் சிவில் ஸ்கோர் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.
வழக்கமாக சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். உங்களது சிபில் ஸ்கோர் 750 முதல் 900 வரை இருந்தால் அது ஒரு சிறந்த சிபில் ஸ்கோர் என மதிப்பீடு செய்யப்படுகிறது. சிபில் ஸ்கோரை எப்படி முறையாக பராமரிப்பது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
கிரெடிட் ரிப்போர்ட்டை ஆய்வு செய்யவும்: உங்களது கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி ஆய்வு செய்யுங்கள் . சிபில் தளத்திலிருந்து உங்களது கிரெடிட் ரிப்போர்ட்டை ஆய்வு செய்யும்போது சிபில் ஸ்கோர் எவ்வளவு என தெரிந்துவிடும். அதுமட்டுமின்றி எந்த இடத்தில் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு ஐடியா உங்களுக்கு கிடைத்துவிடும்.
சரியான நேரத்தில் கடனை செலுத்துங்கள்: உங்களது அனைத்து கடன்கள் மற்றும் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்யுங்கள். அதாவது கிரெடிட் கார்டு கட்டணங்கள், கடன்களுக்காக நீங்கள் செலுத்தும் இஎம்ஐ ஆகியவற்றை நீங்கள் சரியான தேதியில் முறையாக செலுத்தி வந்தால் உங்களது கிரெடிட் ரிப்போர்ட்டில் நெகடிவ் மார்க் என்பது இருக்காது.
கிரெடிட் லிமிட்டை மீறக்கூடாது: உங்களது கிரெடிட் கார்டில் வழங்கப்பட்டுள்ளது கடன் வரம்பை முறையாக அதே அளவில் பராமரித்து வருவது அவசியம். உங்களுக்கு விதிக்கப்பட்ட வரம்பை தாண்டி நீங்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது மீண்டும் அதை கட்டுவதில் சிரமப்படுவீர்கள். இதன் காரணமாக உங்களது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
பல தரப்பட்ட கடன் வகைகள்: பல தரப்பட்ட கடன் வகைகளை கொண்டிருப்பது உங்களது சிபில் ஸ்கோர் அளவை சரியான முறையில் பராமரிப்பதற்கு உதவும் கிரெடிட் கார்டுகள், கடன்கள் மற்றும் பிற வகைகளை பயன்படுத்துங்கள்.
பழைய கடன்களை தீர்ப்பது முக்கியம்: பழைய கடன்கள் எதையும் நீங்கள் தீர்க்காமல் வைத்திருந்தால் முதலில் அதற்கான உரிய செட்டில்மெண்ட் செய்துவிடுங்கள். இது உங்களது கிரெடிட் ஸ்கோர் உயர்வதற்கான வாய்ப்பை வழங்கும்.
மாத தவணைகள் அல்லது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவது, முழு தொகை இல்லையென்றால் கூட முடிந்த அளவு திருப்பி செலுத்துவது நன்மை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
Story Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications