SBI Yono ஆப்-பில் பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பது எப்படி? ரொம்ப சிம்பிள்.. இதை செஞ்சா போதும்!

UPI-ஐப் பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனைகள் பிரபலமடைந்து வருகிறது. UPI பரிவர்த்தனைகள் இருப்பதால், மக்கள் பணம், கார்டு அல்லது ஏடிஎம் போன்றவற்றைத் தேடி பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனாலும் சில வங்கிகள் UPI பரிவர்தனைகளுக்கு வரம்பை விதித்துள்ளன. இந்தக் கட்டுரையில் SBI பேங்கில் UPI பரிவர்த்தனைக்கான வரம்பு எவ்வளவு? மற்றும் அதை எவ்வாறு அதிகரிப்பது? என்பது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

SBI வங்கியின் UPI பரிவர்த்தனை வரம்பு எவ்வளவு?: SBI தினசரி UPI பரிவர்த்தனை வரம்பை அமல்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை மிகவும் கவனமாக நிர்வகிக்கவும், அதிகப்படியான செலவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

 SBI Yono ஆப்-பில் பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பது எப்படி? ரொம்ப சிம்பிள்.. இதை செஞ்சா போதும்!


2023-ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, அனைத்து UPI ஆப்ஸிலும் வாடிக்கையாளர்களை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கிறது.

அதே போல வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வரையறுக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகை ரூ.1,00,000 ஆகும். இந்த வரம்பை மீறி UPI வழியாக பணம் செலுத்த முடியாது. இந்த வரம்புகள் மாற்றத்திற்குட்பட்டவை என்பதைக் கவனிப்பது அவசியம். எனவே, வாடிக்கையாளர்கள் வங்கியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் அவ்வப்போது வங்கி இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

SBI-ஆல் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 1,00,000 ஆகும். இந்த வரம்பை ரூ.1,00,000-க்கு மேல் உங்களால் அதிகரிக்க முடியாது என்றாலும், SBI Yono அப்ளிகேஷன் மூலம் உங்கள் நிதித் திட்டமிடல் தேவைகளுக்கு ஏற்றவாறு அதை குறைத்து கொள்ளலாம்.

SBI-இல் UPI பரிவர்த்தனை வரம்பை எவ்வாறு அதிகரிப்பது?:

ஸ்டெப் 1: SBI ஆன்லைன் பேங்கிங் அப்ளிகேஷனைத் திறந்து உள்நுழையவும்.

ஸ்டெப் 2: மெனுவிலிருந்து 'UPI Transfer' என்ற அப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 3: புதிய பக்கத்தில் 'Set UPI Transaction Limit' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 4: உங்களுடைய இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.

ஸ்டெப் 5: உங்கள் தற்போதைய UPI பரிவர்த்தனை வரம்பு மற்றும் புதிய வரம்பை அமைப்பதற்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஸ்டெப் 6: தற்போதுள்ள வரம்பு ரூ.1,00,000 என்றால், அதை மேலும் அதிகரிக்க முடியாது. இருப்பினும், சிறந்த நிதி நிர்வாகத்திற்காக இந்த வரம்பை நீங்கள் குறைக்கலாம்.

ஸ்டெப் 7: ரூ.1,00,000 வரையிலான புதிய UPI பரிவர்த்தனை வரம்பை என்டர் செய்யவும்.

ஸ்டெப் 8: உறுதிப்படுத்தலுக்காக அதே தொகையை மீண்டும் என்டர் செய்து 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 9: புதிய UPI பரிவர்த்தனை வரம்பை வெற்றிகரமாக அமைக்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.

UPI பரிவர்த்தனை வரம்பை அமைப்பதன் மூலம், SBI தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல நிதி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. SBI UPI வரம்பு அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதால், சமீபத்திய தகவல்களை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+