வருமானவரித்துறை, வரி செலுத்துவோர் தங்கள் பான் கார்டை மெயில் வழியாக உடனடியாக பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவை பான் கார்டு பெறுவதை எளிதாக்கும். அதோடு வரி செலுத்துவோருக்கு காகிதமற்ற மாற்று வழியையும் இந்த செயல்முறை வழங்கும். எனவே எந்தெந்த இடங்களில் பான் கார்டு தேவைப்படுகிறதோ? அந்தந்த இடங்களில் எல்லாம் டிஜிட்டல் முறையில் பான் கார்டு பெற்று உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சேவையை யார் யார் பெறலாம்?: இந்த மெயில் அடிப்படையிலான பான் கார்டு சேவையை ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பெற முடியும். இதற்காக வருமான வரிதுறையின் போர்ட்டலில் எந்தவித அப்டேட்களையும் செய்யத் தேவையில்லை. ஆனால் மெயில் மூலமாக பான் கார்டு பெற வருமானவரித்துறையின் போர்ட்டலில் சரியான மெயில் முகவரியை பதிவு செய்திருந்தால் போதும்.

பான் 2.0 திட்டம்: அரசாங்கம் தற்போது பான் கார்டு 2.0 திட்டத்தை துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு வருமானவரித்துறைக்கு பான் கார்டு வழங்கும் செயல்முறையை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து தற்போது அனைவருக்கும் QR கோடுடன் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்துள்ளார்களா? அல்லது பான் கார்டை தவறாக பயன்படுத்தினார்களா? என்பதை அரசு துறைகள் தெள்ளத்தெளிவாக கண்டறிந்துவிடும். அதற்காகத்தான் இந்த புதிய திட்டம். ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள பான் கார்டுகளில் QR கோடு இருக்காது. புதிய பான் கார்டை பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மெயில் மூலமாக ஆன்லைனில் QR கோடுடன் பான் கார்டு பெறலாம்.
e-PAN பெறுவதற்கான படிகள்: e-PAN-க்கு விண்ணப்பிப்பதற்கு முன், வரி செலுத்துவோர் தங்கள் பான் கார்டு NSDL அல்லது UTI-ஆல் வழங்கப்பட்டதா? என்பதைச் சரிபார்க்க வேண்டும். இந்த தகவல் உங்கள் பான் கார்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். எனவே அதை வைத்து நீங்கள் எதன் மூலம் பான் கார்டு பெற்றீர்கள்? என்ற விவரங்கள் தெரியவரும்.
NSDL-வழங்கப்பட்ட பான் கார்டுகளைப் பெறும் செயல்முறை:
ஸ்டெப் 1: NSDL-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு உங்களுடைய போன் நம்பர், ஆதார் நம்பர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் தகவல்களை சரி பார்த்து OTP அடிப்படையிலான சரிபார்ப்பை தேர்ந்தெடுக்கவும். OTP சரிபார்க்கப்பட்டதும் உங்கள் விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து பரிவர்த்தனையை முடிக்கவும்.
UTIITSL-வழங்கப்பட்ட பான் கார்டுகளைப் பெறும் செயல்முறை:
ஸ்டெப் 1: UTIITSL-இன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: தேவையான விவரங்களை வழங்கி OTP சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும். பணம் செலுத்திய பிறகு பான் கார்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட மெயில் முகவரிக்கு அனுப்பப்படும். பொதுவாக 30 நிமிடங்களில் உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இ-பான் பான் கார்டு செயல்முறை முற்றிலும் இலவசம். நேரடி பான் கார்டு பெற ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications