சமீப காலமாக, இந்தியாவில் சிம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டம், தவறான சிம் கார்டு பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு தனிநபர் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? இதை எப்படி உங்கள் வீட்டிலிருந்தே எளிதாகக் கண்டறிவது என்பதை விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டைப் பயன்படுத்தினால் அதை எப்படி கண்டுபிடிப்பது?: உங்கள் பெயரில் பெறப்பட்டுள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க, கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

ஸ்டெப் 1: அதற்கு முதலில் http://tafcop.sancharsaathi.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: திரையில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டுடன் உங்கள் 10 இலக்க மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உள்நுழைந்தவுடன், உங்கள் பெயரில் தற்போது பதிவுசெய்யப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் பட்டியலும் காண்பிக்கப்படும்.
உங்களுக்கு தெரியாத நம்பரைக் கண்டால் என்ன செய்வது?: பட்டியலில் ஏதேனும் உங்களுக்கு தெரியாத நம்பர் இருந்தால் பீதி அடைய வேண்டாம். நீங்கள் பயன்படுத்தாத எந்த நம்பராக இருந்தாலும் அவற்றை புகார் செய்ய போர்ட்டலில் வசதி வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் பெயரில் உங்களுக்கே தெரியாத நம்பர் பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டால் அவற்றை பிளாக் செய்யலாம். இந்த முன்னெச்சரிக்கை முடிவுகளை எடுப்பது உங்கள் பெயரில் சிம் கார்டுகளைப் பெற்று மோசடிக்கு பயன்படுத்தப்படுவதில் இருந்து உங்களை பாதுகாக்கும். இது போன்ற சிக்கல்களை உடனடியாக சரி செய்வது முக்கியம். ஏனெனில் அவற்றை அப்படியே விட்டு விடுவது உங்கள் பெயரில் குற்ற செயல்கள் நடப்பதற்கு வழி வகுக்கும்.
சிம் கார்டு விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது முக்கியம். மேலே குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டுகளை நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இதன் மூலம் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications