சென்னை: ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய அரிசி ,பருப்பு உள்ளிட்டவை தான் லட்சக்கணக்கான மக்களின் உணவு ஆதாரமாக இருந்து வருகிறது . பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து தான் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.
ரேஷன் கடை: சில சமயங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் நாம் முக்கியமாக வாங்கு சென்ற பொருட்களை இல்லை என கூறிவிடுவார்கள், இதனால் நாம் பொருட்களை வாங்காமலேயே வீடு திரும்பும் நிலையும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை போக்க தான் தமிழ்நாடு பொது விநியோகத் துறை ஒரு எளிமையான வசதியை செயல்படுத்தி வருகிறது. ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும் ரேஷன் கடை இன்று திறந்து இருக்கிறதா இல்லையா, ரேஷன் கடையில் இன்று என்னென்ன பொருட்கள் இருப்பு இருக்கின்றன என்ற விவரத்தை நம்மால் எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

2.26 கோடி ரேஷன் கார்டுகள்: தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 34 ,808 ரேஷன் கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன . மொத்தம் 2.26 கோடி ரேஷன் அட்டைகள் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் மூலம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் பெறுகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாடு பொது விநியோகத் துறையும் ரேஷன் தொடர்பான பல்வேறு சேவைகளையும், ரேஷன் பொருட்கள் தொடர்பான பல்வேறு செய்திகளையும் ஆன்லைனிலேயே மக்கள் எளிமையாக கண்டுபிடிக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.
SMS வசதி: அந்த வகையில் நாம் நம்முடைய போன் வாயிலாகவே புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். அதே போல ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினரை சேர்ப்பது, முகவரி மாற்றம் செய்வது, குடும்பத் தலைவரை மாற்றம் செய்வது என்பன உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் நம்முடைய செல்போன் வாயிலாகவே நம்மால் மிக எளிமையாக முடிக்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?: உங்களுடைய ரேஷன் கடை இன்று திறந்திருக்கிறதா இல்லையா , கடையில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன , அவை எவ்வளவு இருப்பு இருக்கின்றன என்ற விவரங்களை எஸ்எம்எஸ் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து இந்த எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

கடை பொருள் இருப்பு: பொதுமக்கள் 8939922990, 9773904050 ஆகிய எண்களுக்கு PDS 101 என எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்களுடைய ரேஷன் கடையில் இன்று என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, அவை எவ்வளவு இருக்கின்றன என்ற விவரம் தெரிந்துவிடும். இதன் அடிப்படையில் நீங்கள் இன்று கடைக்கு செல்லலாமா நமது வேண்டிய பொருட்கள் இருக்கிறதா? பொருட்களை வாங்கலாமா என்று முடிவினை எடுக்கலாம்.
கடை திறந்துள்ளதா?: அதேபோல இன்று ரேஷன் கடை செயல்படுகிறதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்ற தகவலையும் மெசேஜ் மூலமே அறியலாம். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் இருந்து PDS 102 என எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உங்கள் கடை திறக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறியலாம். ரேஷன் கடையில் பொருட்களுக்கு கூடுதல் கட்டணத்தை வசூல் செய்கிறார்கள் என்றால் நீங்கள் அங்கிருந்து உடனடியாக புகார் அளிக்க முடியும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 107 என மெசேஜ் அனுப்பினால் புகார் பதிவாகிவிடும்.


Click it and Unblock the Notifications