தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் பெற, மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடு வைத்திற்க்கும் சிலர் வாடகைக்கு வீடு விடும் போது அவர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து மானிய விலையில் மட்டும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
சிலர் ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு பெற்று குறைவான மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஒழுங்கு படுத்த மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி?
மின்சார வாரியத்தின் இணையதளத்தில் விரைவில் மின் நுகர்வு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான இணைப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும். அது வந்த பிறகு மின் நுகர்வு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அதனை பயன்படுத்தி மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
ஆஃபலைன்
மேலும் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தும் போதும் தங்களது மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
காலக்கெடு
மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறியிருந்தாலும் அதற்கு எந்த காலக்கெடுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
ஆதார் எண் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் எண் இல்லாதவர்கள், புதிதாக ஆதார் எண்ணிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதற்கான நகலுடன், வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்தை வைத்து மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications