இந்தியாவின் ஒவ்வொரு கிராமம், டவுன்களிலும் இன்று யூபிஐ பேமெண்ட் சேவை வந்துள்ளது, இதன் மூலம் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது இந்தியா.
இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல UPI செயலிகளான கூகுள் பே, பேடிஎம், போன்பே-வில் இனி வங்கி கணக்கை வைத்து பேமெண்ட் செய்வதை தாண்டி தற்போது கிரெடிட் கார்டு வைத்து பேமெண்ட் செய்யும் சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை எப்படி செய்வது..?

மார்ச் 2023 இல், தினசரி UPI பரிவர்த்தனைகள் எண்ணிக்கை 360 மில்லியனைத் தாண்டியதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட் மூலம் UPI பேமெண்ட் செய்ய தற்போது பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் RuPay கிரெடிட் கார்டு மூலம் செலுத்த முடியும்.
அப்படி உங்களிடம் RuPay கிரெடிட் கார்டு இல்லாத பட்சத்தில் புதிதாக அப்ளை செய்து வாங்க வேண்டும். RuPay கிரெடிட் கார்டு பெற்ற உடன் அல்லது உங்களிடம் ஏற்கனவே RuPay கிரெடிட் கார்டு இருக்கும் பட்சத்தில் அதை UPI செயலியில் இணைக்கப்பட வேண்டும். இது எப்படி என்பது தான் பார்க்கப்போகிறோம்.
படி 1: முதலில் நீங்கள் பயன்படுத்தும் கூகுள் பே அல்லது போன் பே அல்லது பேடிஎம் செயலியை திறந்துக்கொள்ளுங்கள்
படி 2: வலது அல்லது இடதுபுறம் இருக்கும் ப்ரொபைல்-ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள்
படி 3: பேமெண்ட் முறை அதாவது payment methods-ஐ தேர்வு செய்யுங்கள்
படி 4: RuPay கிரெடிட் கார்டு-ஐ சேருங்கள்
படி 5: கிரெடிட் கார்டு-ன் விபரங்களை நிரப்புவது மட்டும் அல்லாமல் கிரெடிட் கார்ட்-ன் பின் அளிக்கப்பட வேண்டும்
படி 6: இப்போது உங்கள் கார்ட்-ஐ ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். அதற்கு உங்கள் ப்ரொபைலில் RuPay credit card on UPI என்பதை கிளிக் செய்யவும்.
படி 7: RuPay கிரெடிட் கார்டு யூபிஐ பேமெண்ட்-க்கு தயாராகிவிட்டது.


Click it and Unblock the Notifications