நம் நாட்டில் மிக முக்கியமான முகவரி சான்றுகளாக ஆதார் கார்டும் பான் கார்டும் செயல்படுகிறது. பல்வேறு மோசடி சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறை ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதற்காக பல்வேறு காலக்கெடுக்களையும் வழங்கியது. இந்த வாய்ப்பையும் பயன்படுத்தாத நபர்கள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தங்களுடைய ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்தக் காலக்கேடு முடிந்த பிறகு உங்களுடைய பான் செயலிழக்கப்படலாம். எந்தெந்த இடங்களில் நீங்கள் பான் கார்டை பயன்படுத்துகிறீர்களோ? அந்தத் சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது ஏன் அவசியம்?: ஆதாருடன் பான் கார்டு இணைப்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் கட்டாயமாகும். இந்தியாவில் அண்மைக்காலமாக பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மோசடிக்காரர்களும் பான் கார்டு நம்பரை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் விவரங்களை வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் அப்படி நடக்கும் மோசடிகள் குறித்து அந்த வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருப்பது தான். இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க ஒருவருடைய ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்படுகிறது. இதனால் ஒரே ஒரு பான் மற்றும் ஆதார் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதோடு மோசடிகளும் நடக்காமல் தடுக்க முடியும்.
இதற்கு முன்னர் இலவசமாக பான் மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கு காலக்கெடு வழங்கிய அரசு, தற்போது அதை தளர்த்தியுள்ளது. அதாவது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைத்தாலும் நீங்கள் அபராதம் செலுத்தியாக வேண்டும். அதன் பிறகும் இணைக்கவில்லை என்றால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் நிதி பரிவர்த்தனைகள் செய்தல், கடன் பெற விண்ணப்பித்தால், சேமிப்பு திட்டங்களுக்கு கணக்கு தொடங்குதல் போன்ற உங்களுடைய பல்வேறு பணிகளை செய்ய முடியாமல் போகலாம்.
பான் ஆதாரை ஆன்லைனில் இணைப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் வருமான வரித்துறையின் www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: முகப்பு பக்கத்தில் "Quick Links" என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் பின் "Link Aadhaar" என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
ஸ்டெப் 3: தற்போது ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய பான் கார்டு நம்பர், ஆதார் கார்டு நம்பர், ஆதார் கார்டில் இருப்பது போல் உங்களுடைய பெயர் போன்ற தகவல்களை வழங்க வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செக் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்து உங்களுடைய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குங்கள்.
ஸ்டெப் 5: தேவையான தகவலை வழங்கிய பிறகு லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் வழங்கிய விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய பான் ஆதாருடன் இணைக்கப்படும். அனைத்து செயல்முறையும் முடிந்தவுடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டதற்கான மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications