தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது . வாக்காளர்கள் தாமாக முன்வந்து அனுமதி தரும் பட்சத்தில் அவர்களுடைய ஆதார் எண்ணையும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் இணைப்போம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதற்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் துவங்கி விட்டது. ஒரே வாக்காளரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெற்று இருப்பதை கண்டறிந்து நீக்குவதற்கு இந்த முறை பயன்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் நாம் ஆதார் எண்ணையும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் எப்படி இணைப்பது என்பது குறித்து விரிவாக பார்க்க இருக்கிறோம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஐந்து வழிமுறைகள் இருக்கின்றன.

National Voter Service Portal (NVSP): NVSPஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 'Aadhaar collection' என்பதை தேர்வு செய்து 'Fill Form 6B ' என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றிருக்கும் EPIC number மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் 'Verify' என்பதை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
போன் மூலம் இணைப்பு: உங்களின் வாக்காளர் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை 1950 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். பின்னர் அரசின் பிரதிநிதிகள் உங்களை தொடர்பு கொண்டு ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை எண் இணைப்புக்கு உதவுவார்கள்.
SMS வாயிலாக இணைப்பு: இது தான் எளிமையான முறை, 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். ECILINK என்ற முறையில் மெசேஜ் அனுப்பி இணைத்து கொள்ளலாம்.
செயலி வாயிலாக இணைப்பு: இந்திய தேர்தல் ஆணையம், Voter Helpline App என்ற செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் வாயிலாகவும் ஆதாரையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைக்க முடியும். இந்த செயலியை டவுன்லோடு செய்து, Log in செய்ய வேண்டும். பின்னர் 'Voter Registration,' என்பதை தேர்வு செய்து 'Aadhaar Number Submission (Form 6B)' என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு 'Confirm' கொடுக்க வேண்டும்.
அதிகாரிகள் வாயிலாக: அருகில் இருக்கும் பூத் மட்டத்திலான அதிகாரியை தொடர்பு கொள்ளலாம், இந்த விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்திலேயே கிடைக்கும். அங்கே அவர்கள் வழங்கும் விண்ணப்ப படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அனைத்து வழிகளிலுமே தேர்தல் ஆணையம் நீங்கள் அளித்த விவரங்களை சரிபார்த்து ஆதார், வாக்காளர் அட்டை இணைப்புக்கான ஒப்புதலை வழங்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications