நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் ஓய்வு காலத்தில் நிதி பிரச்சனைகளை எதிர் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்திற்காக தான் இந்தியாவில் பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை , அவருக்கு வேலை வழங்கிய நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையும் என அந்த ஊழியரின் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு அதில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் வட்டியும் வழங்கப்படுகிறது.

கூட்டு வட்டி முறையில் கணக்கீடு செய்யப்படுவதால் குறிப்பிட்ட அந்த ஊழியர் பணி ஓய்வு பெறும்போது அவருடைய பிஎஃப் கணக்கில் ஒரு பெரிய தொகை சேர்ந்திருக்கும். இது அவரின் ஓய்வு கால வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் . இது ஒரு சிறந்த சமூகப் பாதுகாப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த பிஎஃப் கணக்கில் எல்ஐசி பாலிசியை இணைக்கக்கூடிய ஒரு வசதியும் இருக்கிறது. ஆனால் இது பெரும்பாலான ஊழியர்களுக்கு தெரிவது கிடையாது. இவ்வாறு பிஎப் கணக்கையும் எல்ஐசி பாலிசையையும் ஒன்றாக இணைப்பதில் பல்வேறு பயன்கள் இருக்கின்றன. முதலில் இதனை எப்படி இணைப்பது என தெரிந்து கொள்வோம்.
ஈபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள் . அதில் Member e-Sewa Portal-இல் உங்கள் UAN (Universal Account Number) மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்யவும். அதில் KYC Details பகுதியில் சென்று LIC Policy என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் LIC Policy Number மற்றும் தேவையான விவரங்களை பதிவு செய்து Submit செய்யவும். Employer அல்லது EPFO Verification முடிந்ததும், உங்கள் LIC பாலிசி PF கணக்குடன் இணைக்கப்படும்.
பிஎஃப் கணக்குடன் எல்ஐசி பாலிசியை இணைத்தால் EDLI (Employees' Deposit Linked Insurance) திட்டத்தின் கீழ் பணியாளருக்கு காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும். அந்த பணியாளர் உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு 2.5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை நிதி வழங்கப்படும். ஒரு வேளை நீங்கள் LIC ப்ரீமியம் செலுத்த தவறினாலோ அல்லது மறந்துவிட்டாலோ நேரடியாக PF கணக்கிலிருந்து கழிக்கப்படலாம். இதனால், ப்ரீமியம் செலுத்தாமல் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
எல்ஐசி மற்றும் பிஎஃப் இரண்டிலும் ஒரே நாமினி பதிவு செய்தால், கிளைம் செய்யும் போது சிக்கல் இல்லாமல் குடும்பத்தாருக்கு நிதி கிடைக்கும். ஆயுள் காப்பீடு ஓய்வுகால பாதுகாப்பு என இரண்டு சேவைகள் ஒருங்கே கிடைக்கும்.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications