தற்போது தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் கார்டுகளை ரேஷன் பொருட்கள் பெறுவதற்காக வழங்கி வருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, பழைய ரேஷன் கார்டுகளில் இருந்து ஸ்மார்ட் கார்டுக்கு மாறுவது, ரேஷன் கார்டு நிலையை சரி பார்ப்பது போன்ற அனைத்தையும் தமிழக மக்கள் தமிழ்நாடு அரசின் பொது விநியோக அமைப்பின் மூலம் எளிதாக ஆன்லைனில் செய்து கொள்ளலாம். அதேபோல ஸ்மார்ட் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைத்து வைத்துக் கொள்வது அவசியம்.
இதையும் ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும். அப்படி செய்து விட்டால் ரேஷன் கடைகளுக்கு செல்லாமலே ரேஷன் கடைகளில் இருக்கும் இருப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு 3 வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.லைட் கிரீன் கார்டுதாரர்கள் அரிசி மற்றும் பிற பொருட்களை நியாய விலைக் கடைகளில் பெறுகிறார்கள், மேலும் அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களும் இதில் அடங்குவர். வெள்ளை கார்டுதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கூடுதலாக 3 கிலோ சர்க்கரை கிடைக்கும். காக்கி நிற கார்டு காவல்துறை அதிகாரிகளுக்கான பிரத்தியேக கார்டு ஆகும்.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைப்பதற்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் சென்று ஆன்லைனில் ரேஷன் கார்டுகளுடன் மொபைல் நம்பரைப் பதிவுசெய்து இணைக்கலாம்.
1967 என்கிற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்தால் போன் நம்பர் மாற்றுவது குறித்த விபரங்களை கூறுவார்கள். அதேபோல் அருகில் உள்ள தாலுகா ஆபீஸ் அலுவலகத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையங்கள் இருக்கும். அங்கு சென்று உங்களுடைய மொபைல் நம்பரை ரேஷன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் செல்வதற்கு முன்பு குடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குடும்பத் தலைவரின் ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டையின் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும்.
தாலுக்கா அலுவலகத்திற்கு செல்வது வீண் அலைச்சல் என்று நினைப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவும் செய்து கொள்ளலாம். மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கு எந்த வித கட்டணமும் இல்லை. தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் பட்சத்தில் உங்களுடைய மொபைல் நம்பர் அதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யப்பட்டு.
ரேஷன் கார்டில் ஏன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும்?: ரேஷன் கார்டுகளில் மொபைல் நம்பரை இணைப்பதன் மூலம் என்னென்ன பொருட்களை வாங்கி இருக்கிறீர்கள் என்ற விவரங்களை மெசேஜ்-ஆக பெற முடியும். இதனால் தான் குடும்ப தலைவரின் மொபைல் நம்பர் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே போல அரசின் ரேஷன் கார்டு மொபைல் அப்ளிகேஷனில் உள்நுழைவதற்கும் மொபைல் நம்பர் கட்டாயம் தேவை.
மொபைல் நம்பர் இல்லாவிட்டால் ரேஷன் கார்டு தொடர்பான எந்தவித அறிவிப்பையும் பெற முடியாது. அது மட்டுமின்றி ரேஷன் கார்டின் இருப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் இந்த மொபைல் நம்பர் உதவுகிறது. சில நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் இல்லை என்ற தெரிந்த பிறகு வீட்டிற்கு திரும்பி வரும் சூழல் ஏற்படலாம். மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்கும்போது உங்கள் மொபைலிலேயே எளிதாக என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்ற விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications