PAN கார்டில் உங்களின் விவரங்களை மாத்தனுமா? இந்த ஸ்டெப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!

PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண் நமக்கு அத்தியாவசியமான ஒரு ஆவணமாகி விட்டது. நிதி பரிவர்த்தனைகளை தாண்டி நமக்கான அடையாளச் சான்றாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. பான் அட்டையை ஆதாரமாக கொண்டு ஆதார் கார்டில் பெயர் மாற்றம், வங்கிக் கணக்கில் பெயர் மாற்றம் என்பன உள்ளிட்ட மாற்றங்களை நாம் கொண்டு வர முடிகிறது.

எனவே பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்யும் போது நமது தகவல்களை சரியாக வழங்குவது அவசியம். ஒருவேளை உங்களது பான் கார்டில் உள்ள தகவல்கள் தவறாக இருந்தால், அதனை எப்படி மாற்றுவது என்பதை விரிவாக பார்க்கலாம்.

PAN  கார்டில் உங்களின் விவரங்களை மாத்தனுமா? இந்த ஸ்டெப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!

பான் கார்டில் உள்ள தகவல்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் நாம் விண்ணப்பம் செய்து மாற்ற முடியும். முதலில் ஆன்லைனில் எப்படி விவரங்களை மாற்றுவது என தெரிந்து கொள்வோம்.

படி 1: உங்களது பிரவுசரில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html இந்த தளத்திற்கு செல்லவும்.
படி 2: இப்போது தோன்றும் திரையில் "Apply Online" என்பதை தேர்வு செய்யவும். பின்னர் Application Type என்ற பிரிவில் "Changes or correction in existing PAN Data/ Reprint of PAN Card (No changes in existing PAN data)" என்பதை தேர்வு செய்யவும்.
படி 3: இப்போது Category எனக் காட்டும் அதில் "Individual" என்பதை கிளிக் செய்யவும். இதன் பின்னர் பின்வரும் தகவல்களை உள்ளிட வேண்டும்:
குடும்ப பெயர் (Last name/surname)
உங்களின் பெயர் (First name)
பிறந்த தேதி (Date of Birth)
மின்னஞ்சல் முகவரி
குடியுரிமை நிலை (Citizenship status -whether you are a citizen of India)
பான் எண்
படி 4: அனைத்து தகவலையும் உள்ளீடு செய்த பின், "By submitting data to us and/or using our NSDL e-Gov TIN website" என்பதற்கான பாக்ஸை டிக் செய்யவும்.
படி 5: Captcha codeஐ உள்ளீடு செய்து "Submit" கொடுக்கவும்.
படி 6:இதன் பின் உங்கள் விண்ணப்பத்தை உறுதி செய்யும் தகவலும் டோக்கன் எண்ணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
படி 7: இறுதியாக "Continue with PAN Application Form" என்பதை கிளிக் செய்ய வேண்டும், அப்போது ஒரு பக்கத்திற்கு செல்லும். இதில் காட்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். photo அல்லது signature அப்டேட் செய்ய வேண்டும் என்றால் 'Photo Mismatch' அல்லது 'Signature Mismatch' என்பதை தேர்வு செய்யவும்.
தேவையான மாற்றங்களுக்கான உள்ளீடு தந்த பின்பு, அதற்கான கட்டணத்தை செலுத்துவிட்டு ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை பிரிண்ட் செய்து முறையான ஆவணங்களின் நகலுடன் NSDL e-gov அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும். ஓரிரு வாரங்களில் மாற்றங்கள் அப்டேட் செய்யப்பட்டு புது கார்டு கிடைக்கும்.

ஆஃப்லைனில் மாற்றங்கள் செய்வது எப்படி என பார்க்கலாம்.
படி 1: New PAN Card அல்லது Changes அல்லது Correction in PAN Data விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
படி 2: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
படி 3: என்ன மாற்றம் தேவையோ அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து கொள்ளவும்.
படி4: அருகில் உள்ள NSDL மையத்தில் இவற்றை சமர்ப்பிக்கவும்
படி 5: அங்கே இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும், அப்போது 15 இலக்க எண் ஒன்று கொடுக்கப்படும்.

ஓரிரு வாரங்களில் மாற்றங்கள் அப்டேட் செய்யப்பட்டு புது பான் கார்டு உங்களை வந்து சேரும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+