தற்போது நியாய விலைக் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்குவதற்கு அனைவரும் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு எண்ணெய், அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு போன்ற பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் அவற்றை ஆன்லைனிலேயே சரி செய்து கொள்ளலாம். இந்த பதிவில் உங்கள் ஸ்மார்ட் கார்டுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
அரசாங்க ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் சரி.. அவற்றில் உங்களுடைய பெயர், முகவரி போன்ற விவரங்கள் சரியானதாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது கூட ஆதார் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் 14-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் இலவசமாக ஆதார் கார்டில் உள்ள விவரங்களை திருத்திக் கொள்ளலாம். இதன் முக்கிய நோக்கமே அரசாங்க ஆவணங்கள் அனைத்திலும் உங்களுடைய விவரங்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள் வெளிர் பச்சை நிறம், வெள்ளை நிறம், காக்கி நிறம் போன்ற கலர்களில் வருகின்றன. ஒவ்வொரு கார்டும் ஒவ்வொரு குடும்பங்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக காக்கி நிற ஸ்மார்ட் கார்டுகள் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல உங்களுடைய ஸ்மார்ட் கார்டுகளிலும் விவரங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் திருத்தங்களைச் செய்வது எப்படி?: உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் மாற்றங்களைச் செய்ய, கீழ்காணும் ஸ்டெப்ஸ்களை நீங்கள் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: அதற்கு முதலில் அதிகாரப்பூர்வ TNPDS இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "Beneficiary" பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை என்டர் செய்து "Request an OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் சுயவிவரம் திறக்கப்படும். அதில் "Smart Card details" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: விரும்பிய விவரங்களைத் திருத்தவும்
ஸ்டெப் 7: "Approval button"-ஐ கிளிக் செய்யவும். புதிய PDF-ஐ சேவ் செய்யவும்.
மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications