சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்பது வரி இல்லாத மற்றும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட ப்ரத்யேக சேமிப்புத் திட்டமாகும். 10 வயதுடைய அல்லது அதற்கு குறைவான வயதுடைய பெண் குழந்தைகளுக்கு SSY திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயரில் SSY கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு வீட்டிலிருந்தே ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
SSY திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) சேமிப்பு கணக்கு இருந்தால் போதுமானது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை எவ்வாறு தொடங்குவது?: தமிழக அரசு தபால் நிலையங்கள் மூலம் SSY கணக்கைத் தொடங்கலாம். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை வழங்கும் சில வங்கிகளின் மூலமும் மக்கள் SSY கணக்கைத் தொடங்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயரில் SSY கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் அருகில் உள்ள வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ்களை அணுகலாம். குறைந்தபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 ஆண்டுகளுக்குப் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். SSY கணக்கு தொடங்கி 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு பெண் குழந்தை திருமணம் செய்து கொள்ளும் போது இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும்.
உங்கள் மகளுக்கான SSY கணக்கைத் தொடங்குவதற்கு உங்கள் உள்ளூர் தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளையைப் பார்வையிட வேண்டும். SSY பாஸ்புக்கைப் பெற்றவுடன், அதன் பின் பரிவர்த்தனையை ஆன்லைனில் கையாள முடியும்.
சுக்கன்யா சம்ரித்தி யோஜனா: உங்கள் SSY கணக்கில் ஆன்லைனில் பணம் அனுப்புவது எப்படி?: உங்கள் SSY கணக்கில் ஆன்லைன் மூலம் பணம் டெபாசிட் செய்யலாம். டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (IPPB) சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.
ஸ்டெப் 1: IPPB அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து ஒரு அக்கவுண்ட்-ஐ திறக்கவும்.
உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, உங்கள் IPPB கணக்கிற்கு பணம் அனுப்பவும்.
ஸ்டெப் 2: "DOP Products" என்பதன் கீழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் SSY கணக்கு நம்பர் மற்றும் வாடிக்கையாளர் ஐடியை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: நீங்கள் செலுத்த விரும்பும் தொகை மற்றும் தவணை காலத்தை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 5: IPPB மொபைல் அப்ளிகேஷன் மூலம் பணம் வெற்றிகரமாக டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
IPPB மற்றும் தபால் அலுவலகத்தின் வாடிக்கையாளர்கள் இப்போது டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட "DakPay" என்ற செயலியையும் பயன்படுத்தலாம். DakPay டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குகிறது. இந்த அப்ளிகேஷன் மூலம், நீங்கள் பணத்தை அனுப்பலாம். QR குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம் மற்றும் சேவைகள் மற்றும் வணிகர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications