கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா செம லாபம்.. கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு நச்சுனு 4 டிப்ஸ்!

இன்றெல்லாம் கிரெடிட் கார்டு பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. கிரெடிட் கார்டுகளுக்கு அதிக வட்டி வசூலிக்கப்பட்டாலும், பலர் தங்களுடைய பணத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு கிரெடிட் கார்டுகளை தான் பெறுகின்றனர். இந்தப் பதிவில் கிரெடிட் கார்டுகளை எப்படி ஸ்மார்ட்டாக உபயோகித்து பலன்களை அதிகரிப்பது? என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம். இது புதிய கிரெடிட் கார்டு வாங்கியவர்களுக்கும் சரி, ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் சரி நிச்சயம் உதவிகரமானதாக இருக்கும்.

அதிகபட்ச பயன்களைப் பெறுங்கள்: ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் அதற்குரிய பலன்கள் உண்டு. ஆனால் அதை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை. நீங்கள் யுட்டிலிட்டி பில்களுக்கு அதிகம் செலவு செய்பவராக இருந்தால், அதற்கு ஏற்ற கார்டை தேர்வு செய்யலாம்.

 கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா செம லாபம்.. கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு நச்சுனு 4 டிப்ஸ்!


உதாரணமாக ஒரு பொதுத்துறை வங்கியில் இருந்து குறிப்பிட்ட கிரெடிட் கார்டு மூலம் மாதத்திற்கு ரூ.20,000 செலவழிக்கும் கிரெடிட் கார்டு பயனர், கார்டு பயன்பாட்டின் முதல் ஆண்டில் ரூ. 7,501 மதிப்புள்ள பலன்களை அனுபவிக்க முடியும். இந்தக் கார்டு Amazon, Urban Company, Netmeds போன்ற தளங்களில் 10x ரிவார்டு பாயிண்டுகளையும், மற்ற எல்லா ஆன்லைன் தளங்களிலும் 5x ரிவார்டு பாயிண்டுகளையும் வழங்குகிறது.

இதே போல தனியார் வங்கியின் கார்டை மாதம் ரூ.20,000-க்கு மேல் பயன்படுத்தினால், வருடத்திற்கு ரூ.14,550 வரை பயன்கள் கிடைக்கும். இதில் பிரையாரிட்டி பாஸ் போன்ற கூடுதல் பலன்களும் உண்டு.

கூடுதல் தள்ளுபடிகளை கருத்தில் கொள்ளுங்கள்: கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் கேஷ்பேக் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள் மட்டுமில்லாமல் கூடுதலாக தள்ளுபடி மற்றும் சலுகைகளையும் வழங்குகின்றன. இது உங்கள் சேமிப்பை மேலும் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு முன்னணி வெளிநாட்டு வங்கியின் கேஷ்பேக் கார்டு ஆன்லைன், பர்சேஸ்க்கு 10 மடங்கு வரை ரிவார்டு பாயிண்டுகளை வழங்குகிறது.

எனவே உங்களுடைய தேவை என்ன? எதற்காக நீங்கள் அதிக செலவு செய்ய இருக்கிறீர்கள்? என்பதை பொறுத்து கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும். கிரெடிட் கார்டுகளில் இலவசமாக விமான ஓய்வுவறையைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இது வெளிநாட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நபர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை கருத்தில் கொண்டு, எந்த கிரெடிட் கார்டு உங்களுக்கு சிறந்தது என்பதை கண்டுபிடிங்கள்.

வருடாந்திர கட்டணத்தை கருத்தில் கொள்ளுங்கள்: பொதுவாக வருடாந்திர கட்டணங்கள் வசூலிக்கப்படாத கிரெடிட் கார்டுகள், அதிகம் விரும்பப்பட்டாலும், கட்டணம் வசூலிக்கப்படும் கிரெடிட் கார்டுகள் நிறைய ரிவார்டுகளை வழங்குகின்றன. எனவே வருடாந்திர கட்டணம் காரணமாக ஒரு கார்டை நிராகரிக்க கூடாது.

அதற்கு பதிலாக எவ்வளவு ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும் என்ற விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிரெடிட் கார்டுக்கு வருடாந்திர கட்டணமாக ரூ. 750 செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கிரெடிட் கார்டு மூலம் உங்களுக்கு 2500 போனஸ் ரிவார்டுகள் கிடைத்தால், அந்த ரிவார்டு பாயிண்ட்டை நீங்கள் அப்படியே ஏதேனும் பொருளை வாங்குவதற்கு மாற்றிக் கொள்ளலாம்.

ரிவார்டுகளைப் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்: கிரெடிட் கார்டின் பலன்களை புரிந்து கொள்ளும்போது ரிவார்ட் பாயிண்ட்கள், கேஷ்பேக் வரம்புகள் மற்றும் அது செல்லுபடியாகும் தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

உதாரணமாக உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மளிகை சாமான்கள் வாங்கும் போது 5% கேஷ் பேக் வழங்கப்படுகிறது. அதில் 200 ரூபாய் மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும். அதற்கு வரம்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தற்போது உங்களுடைய மளிகை சாமான்கள் பில் ரூ. 10,000 என்றால், உங்களுக்கு 500 கேஷ் பேக் கிடைக்க வேண்டும்.

ஆனால் அதற்கு வரம்பாக ரூ. 200 மட்டுமே வழங்கப்படுகிறது. அப்படியானால் உங்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காமல் போகலாம், மேலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவராக இருந்தால் சில கூட்டாளர் இணையதளங்களுக்கு மட்டுமே ரிவார்டுகள் கிடைக்கும் எனும் பட்சத்தில், அந்த தளங்களில் நீங்கள் ஷாப்பிங் செய்யவில்லை என்றால், இது போன்ற பலன்களை இலக்க நேரிடும். எனவே ரைடர்களை அறிந்து கார்டைத் தேர்வு செய்வது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+