ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறி இருந்தால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர் கிடைத்திருக்கும் வாய்ப்புள்ளது. இப்படி இரண்டுக்கும் மேற்பட்ட UAN இருந்தால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படலாம். இதன் காரணமாக உங்கள் பணத்தை இழக்கவும் நேரிடலாம். எனவே உங்கள் முந்தையையும் UAN நம்பர்களை ஒருங்கிணைத்து, தேவையில்லாத நம்பரை டீ-ஆக்டிவேட் செய்தால் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க முடியும்.
எதற்காக பல UAN நபர்கள் உருவாக்கப்படுகிறது?: சில நேரங்களில் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது ஊழியர் தனது UAN நம்பர் மற்றும் EPF கணக்கை ஒழுங்காக வழங்குவதில்லை. எனவே புதிய நிறுவனங்கள் புதிதாக ஒரு அக்கவுண்ட்டை பதிவு செய்துவிடும். மற்றொன்று சில நேரங்களில் ஒரு ஊழியர் வெளியேறும் போது EPFO அமைப்பில், ஊழியர் நிறுவனத்திலிருந்து ரிசைன் செய்யும் தேதியை நிறுவனங்கள் சரியாக பதிவிடுவதில்லை. இந்தத் தகவல் சரியான நேரத்தில் அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும் இபிஎப்ஓ உங்களுக்கு ஒரு புதிய UAN நம்பரை உருவாக்கிவிடும்.

இதை எப்படி சரி செய்வது?: உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட யூஏஎன் நம்பர் இருந்தால் உங்கள் அனைத்து கணக்குகளையும் ஒரே ஒரு யூஏஎன் நம்பரின் கீழ் இணைக்க முடியும். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய நிறுவனத்தில் சேரும்போது ஏற்கனவே உள்ள யூஏஎன் என்னை மறக்காமல் வழங்குங்கள். இது போன்ற செயல்களால் கூடுதல் யூஏஎன் நம்பர் உருவாகாமல் இருக்கும்.
UAN எண்களை ஒருங்கிணைப்பது எப்படி?: EPFO இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் உங்கள் UAN நம்பரை ஒன்றிணைக்கலாம். இதற்கு, உங்கள் பழைய மற்றும் புதிய UAN நம்பர், உங்கள் ஆதார் நம்பர், உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற தகவல்கள் தேவைப்படும்.
ஸ்டெப் 1: முதலில் EPFO இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு "ஆன்லைன் சர்வீசஸ்" என்ற மெனுவின் கீழ் இருக்கும் "ஒன் மெம்பர் ஒன் EPF (டிரான்ஸ்பர் ரெக்வஸ்ட்)" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தற்போதைய EPF கணக்கு காண்பிக்கப்படும்.
ஸ்டெப் 3: PF டிரான்ஸ்பர் செய்ய, பழைய UAN அல்லது PF கணக்கு எண்ணை வழங்கி "கெட் டீடைல்ஸ்" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: பழைய கணக்கின் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும். விவரங்களை கவனமாக சரிபார்த்துவிட்டு "ஜெனரேட் ஓடிபி" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: பெறப்பட்ட ஓடிபி-ஐ வழங்கி "சப்மிட்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு உங்களுடைய தற்போதைய நிறுவனத்திடம் கோரிக்கையை அங்கீகரிக்க கூறுங்கள். உங்கள் முதலாளி அங்கீகரித்த பிறகு EPFO முந்தைய கணக்குகளை தற்போதைய கணக்குடன் இணைக்கும். இந்த செயல்முறை முடிவதற்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகலாம்.
இதில் மிகவும் முக்கியமானது உங்கள் பழைய EPF கணக்குகளில் கேஒய்சி செயல்முறையை முடித்திருக்க வேண்டும். உங்களிடம் பல EPF கணக்குகள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை கட்டாயம்.
மாற்று வழி: பழைய மற்றும் புதிய UAN நம்பருடன் [email protected] என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம். EPFO அமைப்பு கூடுதல் யுஏஎன் நம்பர்களை சரிபார்த்து தேவையில்லாத நம்பரை டி-ஆக்டிவேட் செய்து ஒன்றை மட்டும் செயலில் வைக்கும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications