ஒரு ஊழியர் ஒரு வேலையிலிருந்து விலகி வேறு வேலையில் சேரும்போது அவருக்கு புதிய இபிஎப் கணக்கும் திறக்கப்படும், ஆனால் சில நேரத்தில் சில நிறுவனங்கள் புதிய யூஏஎன் நம்பரையும் அளிக்கும். இப்படிப்பட்ட பிரச்சனையில் நீங்களும் சிக்கியிருந்தால் இதை படிங்க.
யூஏஎன் என்பது ஒரு 12 இலக்க எண்ணாகும். இந்த எண்ணை எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்டு நிறுவனம் ஒதுக்கீடு செய்யும். இது ஊழியர்களின் வேலைக்காலம் முழுவதும் மாறாது. அவர் வேறு வேலைகளில் சேர்ந்தாலும் மாறாது. இபிஎப் பங்களைப்பை செலுத்தும் ஊழியர்களுக்கு இந்த யூஏஎன் நம்பர் ஒதுக்கீடு செய்யப்படும். அதை ஊழியர்களின் நிறுவனம் தெரியப்படுத்தும்.

பல நிறுவனங்களில் ஒரு ஊழியருக்கு பிஎப் அக்கவுன்ட் இருந்தாலும் அவற்றையெல்லாம் இந்த ஒரே யூஏஎன் நம்பரில் இணைக்கலாம்.
யூஏஎன் நம்பரை ஆன்லைனில் இணைக்கும் முறை 1:
ஒரு ஊழியருக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட யூஏஎன் நம்பர்கள் இருந்தால் இதுபற்றி தங்களது புதிய நிறுவனம் அல்லது இபிஎப் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
[email protected] என்ற முகவரிக்கு ஊழியர் தனது தற்போதைய மற்றும் புதிய யூஏஎன் நம்பரை குறிப்பிட்டு இமெயில் அனுப்ப வேண்டும். இதுபற்றி இபிஎப் நிறுவனம் சரிபார்ப்பு செய்யும்.
அதைத் தொடர்ந்து பழைய யூஏஎன் நம்பர் செயலிழப்பு செய்யப்படும். ஊழியர் செயலிழக்கப்பட்ட யூஏஎன் நம்பருடன் இணைக்கப்பட்டிருந்த தனது பிஎப் அக்கவுன்ட்டை மாறுதல் செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து புதிய அக்கவுன்ட் செயலுக்கு வரும்.
யூஏஎன் நம்பரை ஆன்லைனில் இணைக்கும் முறை 2:
பிஎப் உறுப்பினர் தங்களது பிஎப் தொகையை பழைய யூஏஎன் நம்பரில் இருந்து புதிய எண்ணுக்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்துக்குப் பின்னர் சிஸ்டம் தானாகவே டூப்ளிகேட் யூஏஎன் நம்பரை அடையாளம் கண்டுகொள்ளும்.
அடையாளம் தெரிந்த பின்னர் பழைய யூஏஎன் நம்பர் செயலிழக்கப்படும். ஊழியரின் முந்தைய மெம்பர் ஐடி புதிய யூஏஎன் நம்பருடன் இணைக்கப்படும். அத்துடன் பழைய யூஏஎன் நம்பர் செயலிழப்பு செய்யப்பட்டது குறித்து ஊழியருக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
ஒருவேளை ஊழியர் தனது புதிய யூஏஎன் நம்பரை செயல்படுத்தாமல் இருந்தால் அவருக்கு புதிய யூஏஎன் நம்பரை செயல்படுத்துமாறு தகவல் வரும்.
பிஎப்பை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி?
ஸ்டெப் 1: இபிஎப்ஓ ஆன்லைன் போர்டலில் லாக் இன் செய்யுங்கள். அதில் யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 2: போர்டலில் லாக் இன் செய்தவுடன் ஆன்லைன் சர்வீஸஸ் பிரிவில் உள்ள ஒன் மெம்பர்- ஒன் இபிஎப் அக்கவுன்ட்டை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அடுத்த பக்கத்தில் உள்ள பர்சனல் விவரங்களை சரிபார்க்கவும். மீண்டுமொருமுறை சரி பார்க்கவும். பின்னர் கெட் டீடெய்ல்ஸ் என்பதை கிளிக் செய்து உங்களது பிஎப் விவரங்களை பார்த்து சரிபார்க்கவும்.
ஸ்டெப் 4: பிஎப் விவரங்களை சரிபார்த்தபின்னர் கெட் ஓடிபி என்பதை கிளிக் செய்யவும். உங்களது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் போனுக்கு வந்த ஓடிபியை என்டர் செய்யவும். பின்னர் சப்மிட் என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: இதற்கு பின்னர் ஃபார்ம் 13 ஐ நிரப்பி முந்தைய மற்றும் தற்போதைய நிறுவனங்களில் உள்ள பிஎப் விவரங்களை கேட்கவும்.
ஸ்டெப் 6: இந்த ஃபார்மை நிரப்பியவுடன் உங்களுக்கு ஒரு டிராக்கர் ஐடி கிடைக்கும். அதை வைத்து டிரான்ஸ்பர் ஆவதை நீங்கள் டிராக் செய்யலாம்.
ஸ்டெப் 7: இந்த ஃபார்மை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கையெழுத்திட்டு 10 நாட்களுக்குள் தங்கள் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விவரங்களை நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும். இதைத் தொடர்ந்து ஊழியர்களின் பிஎப் ஆன்லைனில் வெற்றிகரமாக மாறுதல் செய்யப்படும்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications