பிக்சட் டெபாசிட்கள் நீண்ட காலமாக பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாக உள்ளது. இருப்பினும் சமீப காலமாக பிக்சட் டெபாசிட்களுக்கு போட்டி வட்டி விகிதங்களை வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதில் தற்போது புதிதாக ஏர்டெல் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் டிஜிட்டல் கிளையான ஏர்டெல் பைனான்ஸ் 9.1 சதவீத வட்டி விகிதத்தில் பிக்சட் டெபாசிட்களை வழங்க உள்ளது.
பார்தி ஏர்டெல்லின் டிஜிட்டல் நிதிப் பிரிவான ஏர்டெல் ஃபைனான்ஸ், புதிதாக பிக்சட் டெபாசிட் (FD) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையை வழங்குவதற்காக முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் சிறு நிதி நிறுவனங்களுடன் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

பயனர்கள் இப்போது தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நேரடியாக FD-இல் முதலீடு செய்யலாம் மற்றும் 9.1% அதிக வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஃபைனான்ஸ் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஷிவாலிக் பேங்க், சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உட்பட பல்வேறு வங்கிகள் மற்றும் NBFCகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?: "Airtel Thanks" அப்ளிகேஷன் மூலம் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம். தங்கள் முதலீடுகளை தடையின்றி பாதுகாக்கவும் நிர்வாகிக்கவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் திட்டமாகும்.
ஏர்டெல் பைனான்ஸ் வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் "Airtel Thanks" அப்ளிகேஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: கிடைக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் விருப்பங்களை ஆராய்ந்து செய்து உங்களுக்கு ஏற்ற பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய தேவையை பொறுத்து பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்ததும் தேர்வு செய்ததும்.. சரியான விவரங்களை கொடுக்கவும்.
ஸ்டெப் 4: சரிபார்ப்பு நோக்கங்களுக்காக "Airtel Thanks" அப்ளிகேஷனில் KYC செயல் முறையை மேற்கொள்ளவும்.
ஸ்டெப் 5: புதிதாக தொடங்க இருக்கும் பிக்சட் டெபாசிட்க்கு தேவையான தொகையை மாற்ற உங்களுடைய வங்கி கணக்கைப் பயன்படுத்தவும்.
ரிசர்வ் வங்கியின் DICGC மூலம் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்கள் முழுமையாக காப்பீடு செய்யப்படுவதால், உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்கும். அதிக வட்டி விகிதங்களின் மூலம் பயன்பட விரும்பும் பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்கள் வீட்டில் இருந்தபடியே "Airtel Thanks" அப்ளிகேஷன் மூலம் எளிதில் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications