ஓய்வுகாலத்திற்கான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைப்பதற்கான அரசே கொண்டு வந்த ஒரு ஓய்வூதிய திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம். இது என்பிஎஸ் என்றும் அழைக்கப்படுகிறது. முறையாக திட்டமிட்டு இதில் முதலீடு செய்தால் ஓய்வுக்காலத்தில் சிறந்த பலன்களை பெற முடியும்.
என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எளிதாக வீட்டில் இருந்தபடியே கணக்கு தொடங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

என்பிஎஸ் திட்டம் சிறப்பம்சங்கள்: என்பிஎஸ் திட்டத்தில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகன்கள் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். ஓராண்டில் குறைந்தது 6,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதனை மாத தவணையாகவோ அல்லது ஒரு முறை பணமாகவோ செலுத்தலாம். தற்போது 9 %-12% வரை இதில் வட்டி கிடைக்கிறது. ஓய்வு கால திட்டமிடலுக்கும் உகந்த ஒரு திட்டமாகவும் இது கருதப்படுகிறது.
எப்படி என்பிஎஸ் கணக்கு தொடங்குவது?: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புவோர், அதிகாரப்பூர்வ இணையதளமான, https://enps.nsdl.com/eNPS/NationalPension-System.html -க்கு செல்ல வேண்டும் அல்லது அரசு அங்கீகரித்துள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று 'Registration' என்பதை கிளிக் செய்து, 'new registration' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து உங்களின் அடிப்படை விவரங்கள் இதில் கேட்கப்படும், அவற்றை வழங்க வேண்டும்.
ஆதார் அல்லது பான் எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து மத்திய அரசின் மூன்று பதிவுகளை பாதுகாக்கும் அமைப்புகளின் பெயர்கள் திரையில் காண்பிக்கப்படும், அவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பி வைக்கப்படும்.
அதனை உள்ளீடு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.\
பின்னர், முதலீட்டாளரின் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும்.
அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையொப்பம், கேன்சல் செய்யப்பட்ட செக் அல்லது வங்கி அறிக்கை (வங்கி கணக்கு ஆதாரத்திற்காக) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.எனவே கணக்கு தொடங்கும் முன்பு இவற்றை ஸ்கேன் செய்து வைக்கவும்.
எந்த வகையான கணக்கு, அதாவது Tier I அல்லது Tier II அல்லது இரண்டு என திரையில் காட்டும் அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
Tier I என்பது வரி சலுகைகளை வழங்கும் கணக்கு, ஆனால் இதில் பணத்தை திரும்ப பல கட்டுப்பாடுகள் உண்டு.
Tier II என்பது உங்களின் விருப்பத்தின் பேரில் நீங்கள் தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம், இதில் வரி சலுகை கிடைக்காது.
இதனை அடுத்து பென்சன் நிதி மேலாளர் அமைப்பை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பட்டியல் திரையில் காட்டப்படும்.
Tier I கணக்கை தேர்வு செய்திருந்தால் அதில் குறைந்தபட்சம் ரூ.500ஐ முதலீடாக செய்ய வேண்டும்.
Tier II கணக்கை தேர்வு செய்திருந்தால் அதில் குறைந்தபட்சம் ரூ.1,000ஐ முதலீடாக செய்ய வேண்டும்.
தொகையை உள்ளீடு செய்த பின்னர், 12 இலக்க PRAN அதாவது நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் கிடைக்கும்.
பின்னர் மின்னணு சரிபார்ப்பு முறையில் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து உறுதி அளித்துவிட்டால் உங்களின் என்பிஎஸ் கணக்கு ரெடி.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications