அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. ஐசிஐசிஐயின் ஐமொபைல் ஆப்பில் எப்படி தொடங்குவது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்த வரையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.

 

ஏனெனில் பாதுகாப்பு அம்சம் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. வருவாய் குறைவாக இருந்தாலும், நிலையான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை .

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டமானது பொது வருங்கால வைப்பு நிதி பற்றித் தான்.

எல்ஐசி-யின் முத்தான திட்டங்கள்.. யாருக்கெல்லாம் பயன்.. சலுகைகள் என்ன.. இதோ முக்கிய விவரங்கள்..!

 என்ன பார்க்கவிருக்கிறோம்.?

என்ன பார்க்கவிருக்கிறோம்.?

அரசின் இந்த சிறு சேமிப்பு திட்டத்தினை அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் தொடங்கிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே இந்த திட்டத்தினை பற்றி பார்த்துள்ளோம். ஆனால் ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் ஆப்பான iMobile Pay Appல் இருந்து எப்படி தொடங்குவது என்பதைத் தான் இன்று பார்க்கவிருக்கிறோம். அரசின் இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும்.

 தற்போதைய வட்டி விகிதம்?

தற்போதைய வட்டி விகிதம்?

இந்த சிறு சேமிப்பு திட்டமானது நீண்டகால நோக்கில் முதலீடு செய்யப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்திற்கு தற்போது 7.1% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வரிச் சலுகையும் உண்டு. இந்த திட்டத்தில் 7வது நிதியாண்டில் இருந்து உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெற முடியும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் அனுமதிக்கின்றன.

 எப்படி ஆப்பில் தொடங்குவது?
 

எப்படி ஆப்பில் தொடங்குவது?

அதெல்லாம் சரி இதனை எப்படி ICICI bankன், iMobile Appல் எப்படி பிபிஎஃப் அக்கவுண்டினை தொடங்குவது?

முதலில் இதற்காக நீங்கள் iMobile Appல் உங்களது மொபைல் வங்கியினை உங்களது லாகின் ஐடி பாஸ்வேர்டினை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.

 ஆதார் வெரிபிகேஷன் செய்ய வேண்டும்

ஆதார் வெரிபிகேஷன் செய்ய வேண்டும்

அதில் invest and insure என்ற ஆப்சனின் கீழ், PPF/NPS/Gold Bond என்ற திட்டங்கள் சில இருக்கும். அதில் பிபிஎஃப் கணக்கு ஏற்கனவே இல்லை என்றால், அதன் கீழாக apply now என்ற ஆப்சன் இருக்கும்.

அதனை செய்தவுடன் உங்களது ஆதார் வெரிபிகேஷன் கேட்கும். அதன் பிறகே உங்களது கணக்கினை நீங்கள் தொடங்க முடியும்.

 என்னென்ன அம்சங்கள்

என்னென்ன அம்சங்கள்

அதனை பூர்த்தி செய்த பிறகு கீழாக பொது வருங்கால வைப்பு திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் உள்ளது? குறைந்தபட்சம் வருடத்திற்கு 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீட்டினை செய்து கொள்ளலாம் என்ற அம்சங்கள் இருக்கும். இதற்கு கீழாக உள்ள declaration என்பதை agree என கொடுக்க வேண்டும்.

 ஆரம்ப தொகை எவ்வளவு?

ஆரம்ப தொகை எவ்வளவு?

இதன் பிறகு let's get started என்பதை கிளிக் செய்யவும். இதற்கு பிறகு 3 ஸ்டெப்களை செய்ய வேண்டியிருக்கும்.

உங்களது ஆரம்ப கால முதலீட்டு தொகையினை பதிவிட வேண்டும். முதல் முறையாக 500 ரூபாய், 5000 ரூபாய், 10,000 ரூபாய் என செய்ய வேண்டியிருக்கும்.

 எந்த அக்கவுண்ட்?

எந்த அக்கவுண்ட்?

அதன் பிறகு எந்த அக்கவுண்டில் இருந்து டெபிட் செய்ய வேண்டும் என்பது இருக்கும். நீங்கள் ஒரு கணக்கினை மட்டும் வைத்துள்ளீர்கள் எனில் அது மட்டுமே பிரதிபலிக்கும். அதுவே உறுதி செய்யப்படும்.

அதே போல உங்கள் வங்கிக் கணக்கில் கொடுத்துள்ள நாமினி வசதியினையே தொடர விரும்புகிறீர்களா இல்லையா என்பதை காட்டும்.

 ஓடிபி வரும்

ஓடிபி வரும்

அதன் பிறகு உங்களது சுய விவரங்களும் அதில் பிரதிபலிக்கும். அதனை சரி பார்த்து பின்னர் Submit என்ற ஆப்சனை கிளிக் செய்யும் முன்னர், உங்களது ஆதார் நம்பரை கொடுத்து பின் தொடரவும்.

அதன் பிறகு மீண்டும் ஆதார் நம்பரை கொடுத்து கிளிக் செய்யவும். அதன் பிறகு request for OTP என்பதையும் கொடுக்கவும்.

உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியினை பதிவு செய்து, சப்மிட் என கொடுக்கவும். இது வெரிபிகேஷன் செய்யப்படும். அது முடிந்த பின்னர் PPF என்ற கணக்கு ஐசிஐசிஐ-யில் தொடங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to open public provident fund account in ICICI bank via iMobile Pay App? Check details

How to open PPF account in ICICI bank via i mobile app, PPF account opening in ICICI bank mobile banking
Story first published: Tuesday, August 10, 2021, 19:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X