இப்ப நாம ஒரு கார் இல்லன்னா பைக் புதுசா வாங்கப் போறம்னா அதுக்கு வண்டியோட ஃபைனல் பில்லுல ரோடு டாக்ஸும் சேர்த்திருப்பாங்க. நாம எந்த மாநிலத்துல அந்த வாகனத்தை ஓட்டுகிறோமோ அதுக்குத் தகுந்தாப்போல வரியக் கட்டணும்.
எந்தமாதிரியான வாகனத்தை வாங்கணும்னாலும் அதோட அடிப்படை விலையோட மேலும் சில சார்ஜஸ் கட்ட வேண்டி இருக்கும். இதுல வாகன ரிஜிஸ்ட்ரெஷன், மோட்டார் இன்ஸ்சூரன்ஸ், ரோடு டாக்ஸ் சேர்ந்திருக்கும். ரோடு டாக்ஸ் என்பது எந்த நாடு அல்லது மாநிலம் என்பதைப் பொறுத்திருக்கும். மாநிலத்துக்கு ஏற்ப டாக்ஸ் கட்டணம், டாக்ஸ் விதிகள், கட்டமைப்பு மாறுபடும்.

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே ரோடு டாக்ஸை விதிக்கின்றன. மாநில அரசு சுங்கச்சாவடி வரி, மாநில VAT, பயணிகள் மற்றும் சரக்கு, மோட்டார் வாகன டாக்ஸ் ஆகியவற்றை ஆண்டுக்கணக்கில் அல்லது லைப்டைம் அடிப்படையில் வசூலிக்கிறது. இந்த வரிவிதிப்பு மாநிலங்களிடையே மாறுபடும். அந்த வித்தியாசத்தை சம்பந்தப்பட்ட அரசுக்கு வாகனத்தை வாங்கும்போது செலுத்த வேண்டும்.
இந்தியாவில் ரோடு டாக்ஸ் கீழ்க்கண்ட அம்சங்களைப் பொறுத்து வசூலிக்கப்படுகிறது:
வாகன மாதிரி
இஞ்சின் கேப்பாசிட்டி
பயன்பாடு காரணம்
வாகனத்தின் வயது
ரோடு டாக்ஸ் எப்படி செலுத்த வேண்டும்?
படி 1- Parivahan ஆன்லைன் சர்வீஸில் உள்ளதில் Vahan Services or Go to URL https://parivahan.gov.in/vahanservice/vahan/ui/usermgmt/login.xhtml
என்பதை கிளிக் செய்யவும்.
படி 2- ஆன்லைன் சர்வீஸில் Pay Your Tax என்பதை கிளிக் செய்யவும்ா.
படி 3- ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், மொபைல் நம்பர் என்டர் செய்துவிட்டு Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.
படி 4- மொபைலில் பெறப்பட்ட OTPஐ என்டர் செய்து Show Detailsஐ கிளிக் செய்யவும்.
படி 5- என்டர் செய்த உரிமையாளர் விவரங்கள், லேட்டஸ்ட் டாக்ஸ் விவரங்கள், பெர்மிட் விவரங்கள், டாக்ஸ் விவரங்கள், உரிமையாளர் டாக்ஸ் விவரங்களை மீண்டும் சரிபார்க்கவும்.
படி 6- Tax Detailsஇல் Month/ Year /Quarter (if tax is upto date) என்டர் செய்யவும்.
அந்தப் பட்டியலில் Modeஐ தேர்வு செய்யவும்.
-ஆண்டு
-லைப்டைம்
-காலாண்டு
-மாதந்திர
படி 7- ஆட்டோமேடிக்காக உருவான மொத்தப் பணம் காட்டப்படும். அது சரியென்றால் Payment அல்லது Resetஐ அழுத்தவும்.
படி 8- பேமென்ட் ஆப்ஷனை தேர்வு செய்யவும். தேவையான கட்டணத்தை செலுத்திவிட்டு ரசீதை சேவ் செய்யவும்.
ரோடு டாக்ஸ் செலுத்த தேவையான ஆவணங்கள் என்னென்ன?
வாகனத்தைப் பதிவு செய்வதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நீங்கள் சில ஆவணங்களை தர வேண்டும்.
அவை-
-வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்
-வாகனத்தின் இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி
-வாகனம் விற்பனை ரசீது
-உங்களது அடையாள சான்று
-உங்களது முகவரி சான்று


Click it and Unblock the Notifications