இந்தியர்கள் அனைவருக்கும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அரசாங்க ஆவணங்கள் தேவை. ஆதார் கார்டைப் பொறுத்தவரையில் வங்கி கணக்கு திறப்பது, சிம் கார்டு பெறுவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பது போன்ற பணிகளுக்கு முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உங்கள் ஆதார் கார்டு கிழிந்துபோனாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சிக்கல் ஏற்படலாம். ஆனால் இதற்கு பெரிதாக கவலைப்பட தேவையில்லை. நீங்கள் ஆன்லைன் மூலமாக எளிதில் பிவிசி ஆதார் கார்டு பெற முடியும்.
ஆதார் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது கிழிந்து விட்டாலோ அவசர தேவைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. என்ரோல்மென்ட் ஐடியை பயன்படுத்தி எப்படி ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது? என்று பார்ப்போம்.

ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: பின்னர் "Download Aadhaar" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது, உங்கள் என்ரோல்மென்ட் ஐடி அல்லது ஆதார் நம்பர், விர்ச்சுவல் ஐடி நம்பர் போன்றவற்றை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும்.
ஸ்டெப் 5: தற்போது OTP நம்பரை என்டர் செய்து, "Download your e-aadhar card" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: OTP சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் e-Aadhaar PDF-ஐ டவுன்லோட் செய்யலாம்.
தேவைப்பட்டால் நீங்கள் PDF-ஐ பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யலாம்.
மேலே கூறப்பட்டுள்ள வழிமுறையை பயன்படுத்தி உடனடியாக ஆதார் கார்டு பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
PVC ஆதார் கார்டு பெறுவது எப்படி?:
ஸ்டெப் 1: UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது mAadhaar அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.
ஸ்டெப் 2: இதில் உங்களுடைய ஆதார் நம்பர், என்ரோல்மென்ட் ஐடி மற்றும் விர்ச்சுவல் ஐடியை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 3: அதன் பிறகு ஓடிபி சரிபார்ப்புக்காக உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபி-ஐ வழங்கி முடித்தவுடன் பிவிசி ஆதாரை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
பிவிசி ஆதார் கார்டு பெற 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதிலிருந்து 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் வீட்டு முகவரிக்கே ஆதார் டெலிவரி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications