வாட்ஸ் அப் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. தகவல் தொடர்பு செயலியாக மட்டுமில்லாமல் வாட்ஸ் அப்பில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மெடா ஏஐ இணைப்பு, யுபிஐ பயன்பாடு என அடுத்தடுத்து அப்டேட் செய்து வாட்ஸ் அப் தன்னுடைய பயனர்களை தக்க வைத்து கொண்டுள்ளது.
அந்த வகையில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது புதிதாக ஒரு சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக நாம் ஆவணங்களை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் அதற்கு என நாம் தனி செயலிகளை தான் பயன்படுத்த வேண்டும். இனி அதற்கு அவசியமே இல்லை. வாட்ஸ் அப் செயலியிலேயே டாக்குமெண்டை ஸ்கேன் செய்து பிடிஎஃப் ஃபைலாக மாற்றி பயன்படுத்தலாம்.

ஏற்கனவே ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஆண்டிராய்டு பயனர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு பயனர்கள் பீட்டா வெர்ஷனில் இதனை பயன்படுத்த முடியும். படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இனி நீங்கள் ஏதேனும் ஒரு டாக்குமெண்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் கேமராவை கிளிக் செய்தாலே அது டாக்குமெண்ட் ஸ்கேனிங் என்ற ஆப்ஷனை காட்டும். தற்போதுள்ள Browse documents , view from gallery, என்ற ஆப்ஷன்களுடன் இனி scan document என்ற ஆப்ஷனும் திரையில் காட்டும். அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தாலே போதும் அந்த டாக்குமெண்ட் ஸ்கேன் செய்யப்பட்டு விடும். இதற்காக வேறு செயலிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. வாட்ஸ் அப் கேமராவில் ஒரு கிளிக் செய்தாலே போதும்.
வாட்ஸ் அப்பில் டாக்குமெண்ட் ஸ்கேன் செய்யும் போது இரண்டு வகையான மோடுகள் காட்டப்படும். ஒன்று மேனுவல் மோடு (Manual mode) அதாவது அந்த ஆவணம் எப்படி படம்பிடிக்கப்பட வேண்டும் என்பதை நாமே எடிட் செய்து முடிவெடுத்து கொள்ளலாம். ஆட்டோமேட்டிக் மோடு (automatic mode) என ஒன்று இருக்கிறது. அதனை தேர்வு செய்தால் போனே டாக்குமெண்டை ஸ்கேன் சரியான லைடிங் மற்றும் எடிட்டிங் உள்ளிட்டவற்றை செய்து விடும்.
இவ்வாறு நாம் ஸ்கேன் செய்யும் ஆவணங்களை அப்படியே பிடிஎஃப் ஃபைலாக சேவ் செய்து கொள்ளலாம். பின்னர் அதனை யாருக்கு அனுப்ப வேண்டுமொ அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். எண்ட் - டூ- எண்ட் என்கிரிப்ஷன் முறை பயன்படுத்தப்படுவதால் ஆவணத்தில் இருக்கும் தகவல்களை அனுப்பும் நபர் மற்றும் அதனை பெரும் நபர் தவிர வேறு யாராலும் அணுக முடியாது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்து கொண்டால் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications