இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. நம்முடைய அடையாள ஆவணங்களான பான் கார்டு , ஆதார் கார்டு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நமக்கே தெரியாமல் நம்முடைய பெயரை பயன்படுத்தி நிறைய மோசடிகள் நடக்கின்றன. திடீரென அவை நமக்கு தெரிய வரும்போது பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
இந்தியாவில் சமீப காலமாக பொதுமக்களின் பான் கார்டு தவறாக பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் கடன் வாங்கக்கூடிய மோசடி நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கியில் இருந்து அழைப்பு வரும் போது அல்லது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது, கிரெடிட் ஸ்கோர் திடீரென குறைந்திருக்கும் போது தான் நமக்கே இந்த விஷயம் தெரிய வரும்.

டிஜிட்டல் அடிப்படையிலான மோசடிகள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் நாம் உஷாராக இருந்து கொள்வதுதான் சாமர்த்தியம். உங்களுடைய அடையாள ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய பான் நம்பரை கொண்டு யாரேனும் உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் கடன் வாங்கி இருக்கிறார்களா என்பதை நாம் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்கு மிக எளிமையான ஒரு வழி இருக்கிறது.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது நீங்கள் பரிசோதனை செய்தால் போதும். உங்களுடைய பான் கார்டு பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒவ்வொரு கடனும் உங்களுடைய கிரெடிட் வரலாற்றில் இருக்கும். தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் சில வகையிலான மைக்ரோ லோன்கள் ஆகிய அனைத்தும் கிரெடிட் வரலாற்றில் காட்டப்படும்.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் நமக்கான கிரெடிட் ஸ்கோர்களை இலவசமாகவே வழங்குகின்றன. எனவே உங்களின் கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்து பாருங்கள். CIBIL, Experian, Equifax போன்ற நிறுவனங்களின் இணையதளங்களில் உங்களுடைய பான் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டால் உங்களுக்கான கிரெடிட் அறிக்கை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அதில் உங்களுடைய பான் எண்ணை பயன்படுத்தி என்னென்ன களங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன, அவற்றில் எதெல்லாம் திரும்ப அடைக்கப்பட்டு இருக்கிறது என்ற விபரம் பட்டியலாக காட்டும். அதில் நீங்கள் வாங்காத கடன் இருக்கிறது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பெயரில் கடன் வாங்கப்பட்டு இருப்பது என்பதை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக சைபர் கிரைமில் புகார் தர வேண்டும்.
அதே போல சம்பந்தமே இல்லாமல் உங்களின் கிரெடிட் ஸ்கோரினை நிதி நிறுவனங்கள், வங்கிகள் பரிசோதனை செய்ததாக தெரிந்தாலும் உடனே கிரேடிட் ஸ்கோர் வழங்கிய நிறுவனத்திடமும் தொடர்புடைய வங்கியிடமும் புகார் தர வேண்டும். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் திடீரென குறைந்து இருக்கிறதா என்பதை பாருங்கள் நீங்கள் சரியாக கடன்கள் அனைத்தையும் திரும்ப செலுத்தி இருக்கிறீர்கள், ஆனால் கிரெடிட் ஸ்கோர் மட்டும் குறைந்து இருக்கிறது என்றால் உங்களுடைய பான் கார்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது என அர்த்தம். இது தொடர்பாகவும் புகார் அளிப்பது நல்லது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications