டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில சமயங்களில் திடீரென வெளியூர் பயணம் செய்ய திட்டமிடும் போது பலர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்வார்கள்.

டிக்கெட்டை முன்பதிவு செய்து இருந்தால் கண்டிப்பாக உட்கார்ந்தோ அல்லது படுத்துக்கொண்டோ ரயிலில் பயணம் செய்யலாம்.

இல்லை என்றால் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வாங்கி பயணம் செய்ய வேண்டும். ஆங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறி அதற்கான கட்டணத்தைச் செலுத்தும் முறையை ரயில்வேஸ் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.8000 சம்பளத்துடன் ஆரம்பித்த நிகில் காமத் பயணம்.. இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி? ரூ.8000 சம்பளத்துடன் ஆரம்பித்த நிகில் காமத் பயணம்.. இன்று கோடீஸ்வரர் ஆனது எப்படி?

தட்கல் டிக்கெட்

தட்கல் டிக்கெட்

முன்கூட்டியே திட்டமிடாமல் ரயில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் விற்கப்படும். ஆனால் அது ரயில் புறப்படும் 24 மணி நேரம் முன்பே தொடங்கப்படுவதால் கடைசி மணி நேரங்களில் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில்லை.

கரண்ட் டிக்கெட் புக்கிங்

கரண்ட் டிக்கெட் புக்கிங்

வார நாட்களில் திட்டமிடாமல் ரயில் பயணம் செய்யும் போது கரண்ட் டிக்கெட் புக்கிங் மூலம் பயணம் செய்யலாம். ஆனால் இதுவும் வார இறுதி நாட்களில் கிடைப்பதில்லை.

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் விதி

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் விதி

இந்நிலையில் இந்தியாவில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் ஏறிவிட்டு அதற்கான கட்டணம் செலுத்தும் முறை ஒன்று உள்ளது. இது குறித்து பலருக்கு தெரிவதில்லை. அந்த விதிகுறித்து இப்போது இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

பிளாட்பார்ம் டிக்கெட்

பிளாட்பார்ம் டிக்கெட்

ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணத்தைத் தொடங்கலாம் என்றாலும் ரயில் நிலையம் பிளாட்பார்ம் செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் கட்டாயம். முதலில் ரயில் நிலையம் பிளாட்பார்ம் டிக்கெட்டை எடுக்க வெண்டும்.

டிக்கெட் பரிசோதகர்

டிக்கெட் பரிசோதகர்

பிளாட்பார்ம் டிக்கெட் பயன்படுத்தி ரயிலுக்கு சென்ற உடன், ரயிலின் டிக்கெட் பரிசோதகரை சந்தித்து பிளாட்பார்ம் டிக்கெட்டை காண்பித்து பயணம் செய்வதற்கான டிக்கெட்டை டெபிட் கார்டு / ரொக்கப் பணம் செலுத்தி பெறலாம்.

சீட் இல்லை என்றால் என்ன ஆகும்?

சீட் இல்லை என்றால் என்ன ஆகும்?

டிக்கெட் இல்லாமல் செல்பவர்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகரை அனுக வேண்டும். சீட் இருக்கிறது என்றால் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் வழங்குவார். இல்லை என்றால் அபராதம் 250 ரூபாய் மற்றும் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணத்தை டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Start A Train Travel Without Ticket?

How to Start A Train Travel Without Ticket?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X