இந்தியாவில் ஐஐடி , ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டி இருக்கிறது மத்திய அரசு.
இலவச படிப்பு: ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் வழங்கக்கூடிய ட்ரெண்டிங் ஆன படிப்புகளை நாட்டில் உள்ள அனைவரும் இலவசமாகவே படிப்பதற்கான ஒரு வாய்ப்பினை மத்திய அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடங்கி பல்வேறு துறை சார்ந்த டிரெண்டிங்கான படிப்புகளை எந்த கட்டணமும் இல்லாமல் எந்த ஒரு கல்லூரிக்கும் செல்லாமல் நான் இருந்த இடத்திலேயே இலவசமாக பயில முடியும்.

முன்னணி நிறுவனங்கள்: 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடங்கி அனைவரும் இந்த முறையில் இலவசமாக ஆன்லைனிலேயே பயில முடியும். மத்திய அரசு இதற்காக Swayam என்ற இணையதளத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இணையதள முகவரிக்கு சென்று யார் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். UGC, NCERT, AICTE உள்ளிட்ட முன்னணி அமைப்புகளின் உதவியோடு ஐஐடி ,ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பாடங்கள் இதில் கிடைக்கின்றன.
அரசின் இணையதளம்: நம்முடைய வேலையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வது, நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படை புரிதலை வளர்த்து கொள்வது என இந்த தளத்தை நாம் முறையாக பயன்படுத்தினால் நம் தலையெழுத்தே மாறும். எனக்கு புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் ஆனால் அதற்க பணமோ கல்லூரிக்கு சென்று பயில நேரமோ இல்லை என்பவர்கள் Swayam இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
கட்டணம் தேவையில்லை: லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன், இணையவசதி இருந்தாலே போதும், இதில் நாம் பதிவு செய்து எந்த பிரிவில் படிக்க வேண்டுமோ அதனை எளிதாக ஆன்லைன் வாயிலாகவே தேர்வு செய்யலாம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் பயிலும் வாய்ப்பு கிடைக்கிறது. வீடியோ அடிப்படையிலான கற்றுக் கொள்ளும் முறை ,புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் முறை, நாம் படித்தவற்றை சோதனை செய்து கொள்ள தேர்வுகள் மற்றும் வினாடி வினாக்கள் , மேலும் ஆன்லைனில் ஒரு கலந்தாலோசனை கூட்டம் என நான்கு விகித முறைகளில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சான்றிதழ் கிடைக்கும்: இந்த படிப்புகளை முடித்தவர்கள் சான்றிதழும் பெற்றுக் கொள்ளலாம் அதற்கு ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருக்கும். எளிமையாக நாம் இந்த தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். இதில் எந்தெந்த பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கோர்ஸ் வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம் அதனை எத்தனை வாரங்கள் பயில வேண்டும் என அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications