இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) வழங்கப்படும் திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம். ஓய்வு காலத்தில் யாரையும் நம்பி இல்லாமல் தங்களுக்கு தேவைப்படும் நிதியை உருவாக்குவதற்கான மிகவும் பிரபலமான திட்டமாக EPF உள்ளது. இந்தத் திட்டத்தில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து மாதம் மாதம் பங்களிக்க வேண்டும். இந்த தொகை காலப்போக்கில் அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதற்கு வட்டியும் வழங்கப்படுகிறது.
PF கணக்கின் முக்கியமான நன்மை என்னவென்றால் நீங்கள் வேலையை விட்டு மாறும் போதோ அல்லது உங்களுக்கு தேவைப்படும் போதோ பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது உங்கள் முழு PF தொகையையும் எவ்வாறு வித்ரா செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். PF தொகையைத் திரும்பப் பெறுவதற்கு கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.

முழு PF தொகையையும் திரும்பப் பெறுவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் அதிகாரபூர்வ EPFO இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN), பாஸ்வோர்ட் மற்றும் கேப்ட்சா கோட் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழையவும். உள்நுழைந்தவுடன் "மேனேஜ்" என்ற செக்சனுக்கு சென்று உங்களுடைய KYC விவரங்கள் புதுப்பித்த நிலையில் துல்லியமாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவும்.
ஸ்டெப் 3: "ஆன்லைன் சர்வீசஸ்" என்ற பகுதிக்குச் சென்று "ஃபார்ம் 31, ஃபார்ம் 19 & ஃபார்ம் 10 சி" என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுக்கு 3 தேர்வுகள் காண்பிக்கப்படும் "ஃபுல் இபிஎஃப் செட்டில்மெண்ட்", "இபிஎஃப் பார்ட் வித்டிராவல்", "பென்ஷன் வித்டிராவல்". முழு பணத்தையும் வித்ரா செய்ய ஃபுல் இபிஎஃப் செட்டில்மெண்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: படிவத்தை சமர்ப்பித்து சில நாட்கள் காத்திருக்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட பேங்க் அக்கவுண்டுக்கு மொத்த PF தொகையும் வரவு வைக்கப்படும்.
அதேபோல ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறும் போது பழைய பிஎஃப் கணக்கை புதிய பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: "சர்வீசஸ்" என்பதைக் கிளிக் செய்து "ஃபார் எம்ப்ளாயிஸ்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: புதிய பக்கத்தில் "ஒன் எம்பிளாயி ஒன் இபிஎஃப் அக்கவுண்ட்" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் உங்களுடைய யுஏஎன், பாஸ்வேர்ட் மற்றும் கேப்சா கோட் ஆகியவற்றை வழங்கி உள்நுழைய வேண்டும்.
ஸ்டெப் 4: உங்களுடைய பழைய பிஎப் கணக்கின் விவரங்களை வழங்கி கோரிக்கையை சமர்ப்பிக்கவும். உங்களுடைய தற்போதைய நிறுவனம் இந்த கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும். ஒப்புதல் வழங்கப்பட்டதும் பழைய பிஎப் கணக்கு புதிய பிஎப் கணக்குடன் EPFO அமைப்பு இணைக்கும். மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எளிதில் உங்களுடைய பிஎஃப் தொகையை திரும்பப் பெறலாம்.


Click it and Unblock the Notifications