இந்திய ரயில்வே குறைந்த செலவில் பயணம் செய்யும் வசதியை வழங்குகிறது. நீண்ட நாட்களாக சாமானியர்களுக்கு போக்குவரத்துச் செலவை மிச்சப்படுத்தி பயணம் செய்ய உதவிகரமானதாக இருந்து வருகிறது. சில நேரங்களில் முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக பயணிக்க முடியாமல் போகலாம். இப்படிப்பட்ட நேரங்களில் உங்களுடைய டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.
இதன் மூலம் டிக்கெட்டை ரத்து செய்வதால் ஏற்படக்கூடிய நஷ்டத்தைத் தவிர்க்கலாம். வேறு ஒருவருக்கு முன்பதிவு செய்த டிக்கெட்டை மாற்றுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பண்டிகை காலங்கள், வீட்டு விசேஷங்கள் போன்ற சமயத்தில் 2 அல்லது 3 மாதங்களுக்கு முன் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வைப்போம். ஒரு வேலை இந்த டிக்கெட் மூலம் பயணம் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் அதை நீங்கள் வேறு ஒருவருக்கு மாற்றலாம். பயணம் செய்ய முடியாதவர்களுக்கு பரிமாற்றம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
யாருக்கு டிக்கெட்டை மாற்றலாம்?: ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே மாற்ற முடியும். உங்களுடைய பெற்றோர், உடன் பிறந்தவர்கள், குழந்தைகள், மனைவி என நீங்கள் டிக்கெட்டை மற்றவர்களுக்கு மாற்றலாம். இதை தவிர வேறு யாருக்கும் மாற்ற முடியாது.
டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றுவது எப்படி?: ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், கவுண்டரில் முன்பதிவு செய்திருந்தாலும் ரயில்வே டிக்கெட்டை மாற்றிக்கொள்ள கவுண்டருக்கு செல்ல வேண்டும். ரயில் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து பயணம் செய்யும் நபரின் அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தைப் பெற்று பயணியின் விவரங்களை நிரப்பி வழங்க வேண்டும். ரயில்வே ஊழியர்கள் பின்னர் இதை சரிபார்த்து டிக்கெட்டை புதிய நபரின் பெயரில் அப்டேட் செய்வார்கள்.
முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டை பயன்படுத்த முடியாமல் போகும் போது இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதோடு போர்டிங் ஸ்டேஷனை மாற்றவும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்நுழைந்து "போர்டிங் பாயிண்ட் சேஞ்ச்" என்பதைத் தேர்ந்தெடுத்து PNR நம்பர், ரயில் நம்பர் மற்றும் கேப்சாவை வழங்கி கண்டிஷன்கள் என்ற டிக் பாக்சை டிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். OTP விவரங்களை சமர்ப்பித்தால் புதிய போர்டிங் ஸ்டேஷனை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஆஃப்லைனில் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற முடியாது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications