ஈபிஎப்ஓ அமைப்பு அனைத்து பிஎப் கணக்காளர்களும் தங்களது ஈபிஎப் கணக்கிற்கு ஈ-நாமினேஷன் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பிஎப் கணக்கிற்கு ஈ-நாமினேஷன் செய்வது மூலம் EPFO அமைப்பு அளிக்கும் ஊழியர்கள் வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான (Employees' Deposit Linked Insurance (EDLI)) பலன்களைப் பிஎப் கணக்கின் உரிமையாளரின் குடும்பம் இத்திட்டம் மூலம் பலன் பெறலாம்.

பிஎப் கணக்காளர் ஒருவர் இறந்தால் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாயும், அதிகப்படியாக 7 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை EDLI திட்டம் வாயிலாகப் பெற முடியும்.
ஆனால் இந்தத் தொகையைப் பெற கட்டாயம் ஈ-நாமினேஷன் செய்தாக வேண்டும். சரி ஈ-நாமினேஷன் அப்டேட் செய்வது எப்படி..?!
படி 1: முதல் ஈபிஎப் இணையதளத்திற்குச் செல்லுங்கள் https://www.epfindia.gov.in/site_en/index.php
படி 2: அதில் சர்வீசஸ் என்ற டேப்-ஐ கிளிக் செய்யுங்கள்
படி 3: அதன் பின் ஊழியர்களுக்கான பிரிவைத் தேர்வு செய்யுங்கள், அதாவது 'For Employees' என்பதைத் தேர்வு செய்யுங்கள்
படி 4: அதன் பின்பு இத்தளம் புதிய இணையப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும், அதில் இடதுபுறம் கீழே சர்வீசஸ் என்ப டேப் கீழ் Member UAN/Online Service (OCS/OTCP) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

படி 5: இத்தளம் உங்களைப் பிஎப் கணக்கின் தளத்திற்குக் கொண்டு செல்லும், அங்கே உங்களது UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா கோடு ஆகியவற்றைப் பதிவு செய்து உள்நுழையுங்கள்.

படி 6: பொதுவாக அனைத்து பிப் கணக்குகளுக்கும் லாக்இன் செய்யப்பட்ட உடனே ஈ-நாமினேஷன் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வருகிறது. அப்படி அலர்ட் மெசேஜ் பெறாதவர்கள் 'Manage' என்ற டேப்-ஐ கிளிக் செய்து அதில் வரும் ஈ-நாமினேஷன் என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
படி 7: குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் yes என்பதைக் கிளிக் செய்யுங்கள்
படி 8: 'Add Family Details' என்பதைக் கிளிக் செய்யுங்கள். இத்தளத்தில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் கிளிக் செய்ய முடியும்.
படி 9: இதன் பின்பு நாமினேஷன் தகவல் என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் யாருக்கும் எவ்வளவு தொகையைப் பிரித்துக் கொடுக்கலாம் என்பதைத் தேர்வு செய்ய முடியும்.
படி 10: தகவல்களைப் பூர்த்திச் செய்த உடன் தரவுகளைச் சேமிக்க 'Save EPF Nomination' என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
படி 11: அடுத்தப் பக்கத்தில் நீங்க 'E-sign' செய்ய வேண்டும், அதற்காக OTP பெற வேண்டும். ஆதார் - பான்- பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும்.
படி 12: மொபைல் எண்ணுக்கு வந்த OTP-ஐ பதிவு செய்தால் போதும் ஈ-நாமினேஷன் முடிந்தது.


Click it and Unblock the Notifications