சென்னை: சென்னை வாகன ஓட்டிகளுக்கு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மிக முக்கியமான ஒரு அப்டேட்டை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அது தொடர்பான விவரங்களை வாகன் மற்றும் சாரதி போர்ட்டல்களில் பதிவு செய்து வைத்திருப்பது கட்டாயம். இவ்வாறு பதிவு செய்து வைத்திருப்பவர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை மாற்றும் போது இந்த தளங்களில் அப்டேட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
பொதுவாக இதுபோல நம்முடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான மொபைல் எண்ணை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நாம் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகள் வாகன் மற்றும் சாரதி ஆகிய இணையதளங்கள் வாயிலாகவே எளிதாக தங்களுடைய மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள பதிவில், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை வாகன் மற்றும் சாரதி போர்ட்டல்களில் புதுப்பிக்க புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர். இங்கே காட்டப்பட்டுள்ள கியூஆர் கோடினை உங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் போதும் வாகன் மற்றும் சாரதி தளங்களுக்கு சென்று விடும் என கூறியுள்ளனர்.
மேலும் அதற்கான இணையதள லிங்குகளையும் எக்ஸ் தள பதிவிலேயே குறிப்பிட்டிருக்கின்றனர். https://vahan.parivahan.gov.in/mobileupdate/ மற்றும் https://sarathi.parivahan.gov.in ஆகிய இரண்டு லிங்குகளை கிளிக் செய்து வாகன ஓட்டிகள் தங்களுடைய மொபைல் எண்ணை அப்டேட் செய்து கொள்ள முடியும். இதில் வாகன் தளத்தில் மொபைல் எண்ணை அப்டேட் செய்யும் போது உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்ட தேதி , வாகன பதிவு எண், சேசிஸ் எண் மற்றும் என்ஜின் எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். அவற்றை உள்ளீடு செய்த பின்னர் மொபைல் எண்ணை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
அடுத்ததாக சாரதி தளத்திற்கு செல்லும் போது முதலில் உங்களுடைய மாநிலம் குறித்த விவரம் கேட்கும். அதில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஓபன் ஆகும் பக்கத்தில் மொபைல் நம்பர் அப்டேட் என்பதை கிளிக் செய்து நாம் மொபைக் எண்ணை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய ஆதார் எண் விவரங்கள் கேட்கப்படும் . ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு மொபைல் எண் அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications