ஆதார் அட்டை-யில் மொபைல் எண் அப்டேட் செய்வது எப்படி..? ரொம்ப ஈஸி பாஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

UIDAI போர்ட்டலில் பல சேவைகள் இருப்பதால் உங்கள் ஆதார் அட்டையில் புதிய மொபைல் எண்ணை எளிதாக மாற்றலாம் அல்லது சேர்க்கலாம்.

 

ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் தொலைப்பேசி எண்களை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் புதுப்பிக்க அல்லது இணைக்கும் விருப்பத்தை வழங்க UIDAI இந்த நடைமுறையை நெறிப்படுத்தியுள்ளது.

இந்தக் கட்டுரையில் உங்கள் மொபைல் எண்ணை எவ்வாறு புதுப்பிப்பது அல்லது மாற்றுவது என்பதைப் பார்ப்போம்.

அமெரிக்க நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. நோட்டீஸ் பீரியட்-ல் சம்பள அதிகரிப்பு.. எவ்வளவு? அமெரிக்க நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. நோட்டீஸ் பீரியட்-ல் சம்பள அதிகரிப்பு.. எவ்வளவு?

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

ஆதார் என்பது இன்று ஒரு குடிமகனின் முக்கிய ஆவணமாக மாறியுள்ளது, அனைத்து அரசு மற்றும் முக்கியப் பணிகளுக்கு ஆதார் அட்டையை முக்கிய ஆவணமாகக் கேட்கப்படும் காரணத்தால் ஆதார் தரவுகள் சரியானதாக இருக்க வேண்டும் இல்லையெனில் அரசு சேவைகளை முழுமையாகப் பெற முடியாது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

புதிய வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு பெறுவதில் துவங்கி புதிய கார் அல்லது சிம் கார்டு வாங்குவது வரையில் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இதேபோல் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த நாள், முகவரி, போன்ற முக்கியமான ஆவணங்கள் இருப்பதால் பாதுகாப்பாகவும் வைக்க வேண்டியது அவசியமாகும்.

ஆன்லைன் முறை
 

ஆன்லைன் முறை

ஆன்லைனில் மொபைல் எண்ணை எவ்வாறு புதுப்பிக்க முடியும்? நீங்கள் எடுக்க வேண்டிய படிகள் பின்வருமாறு:

படி 1: மொபைல் எண்ணை மாற்ற, UIDAI இணையதளத்திற்கு முதலில் செல்லவும்

படி 2: நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தொலைப்பேசி எண்ணை உள்ளிட்ட பிறகு பொருத்தமான பகுதிகளில் கேப்ட்சாவை உள்ளிடவும்.

படி 3: "ஓடிபி அனுப்பு" என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட OTPயை டைப் செய்யவும்.

படி 4: இப்போது "OTP ஐ சமர்ப்பித்துத் தொடரவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 5: "Online Aadhaar Services" கீழ்தோன்றும் தேர்வைக் காண்பிக்கும். நீங்கள் புதுப்பிக்க விரும்பும் ஒன்றில், கிளிக் செய்யவும். மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, அந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பொருத்தமான தகவலை உள்ளிடவும்.

படி 6: மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு புதிய பக்கம் திறக்கும். நீங்கள் இப்போது ஒரு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். இதன் விளைவாக உங்கள் எண்ணுக்கு OTP கிடைக்கும். OTP ஐ உறுதிசெய்த பிறகு "சேமி மற்றும் தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 7: ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் செய்து, அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லவும்.

படி 8: டேட்டாபேஸ் உங்கள் தற்போதைய மொபைல் எண்ணுடன் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

ஆஃப்லைன் முறை

ஆஃப்லைன் முறை

உங்கள் மொபைல் எண்ணை ஆஃப்லைனில் எப்படி அப்டேட் செய்யலாம்?

படி 1: அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் செல்லவும்.

படி 2: ஆதார் மையத்தின் புதுப்பிப்புப் படிவத்தைப் பூர்த்திச் செய்யவும்.

படி 3: உங்கள் கோரிக்கையை நிர்வாகிக்கு அனுப்பவும்.

படி 4: உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் ரூ. 50 கட்டணத்தைச் செலுத்தும் பட்சத்தில் மொபைல் எண் மாற்றப்படும்.

படி 5: URN எண்ணுடன் கூடிய ஒப்புகை ரசீது ஆதார் நிர்வாகியால் அனுப்பப்படும். URN ஐ பயன்படுத்தி, நீங்கள் செயல்முறையைக் கண்காணிக்கலாம்.

படி 6: உங்கள் மொபைல் எண் 90 நாட்களுக்குள் ஆதார் டேட்டாபேஸ்-ல் மாற்றியமைக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: aadhaar ஆதார்
English summary

How to update mobile number in your Aadhaar card? Easy and safest step by step guide

How to update mobile number in your Aadhaar card? Easy and safest way to update mobile number in your Aadhaar card, Step by step guide
Story first published: Tuesday, September 13, 2022, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X