இன்று இந்தியர்களின் முக்கிய அடையாள அட்டை, முகவரி ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது ஆதார் கார்டு. இதனை அரசு பெரும்பாலான சேவைகளில் ஆதாரினை காட்டாயமாக்கி வருகிறது.
குறிப்பாக வங்கி கணக்கு, பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரி கணக்கு இப்படி பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆதார் கார்டில் ஏதேனும் சிறிய பிரச்சனை என்றாலும், முன்பெல்லாம் ஆதார் மையங்களை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு உங்களது ஆதாரில் முகவரி மாற்றமோ அல்லது பெயர் மாற்றமோ? மொபைல் எண் மாற்றமோ செய்ய வேண்டும் எனில், தற்போது பெரும்பாலான சேவைகளை ஆன்லைனிலேயே பெற முடியும். அந்த கையில் இன்று எப்படி மொபைல் நம்பரினை அப்டேட் செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.
மிக அவசியம்
உங்கள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் மிகவும் முக்கியமானதொரு விஷயமாகும். ஏனெனில் நீங்கள் அதனை பல்வேறு சேவைகளிலும் பயன்படுத்த முடியாது. ஆக இதுபோன்ற சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டுமெனில், கட்டாயம் உங்களது மொபைல் எண்ணினை ஆதாருடன் இணைக்க வேண்டும். இதற்காக நீங்கள் பெரியதாக எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்காக அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்.
மொபைல் நம்பர் இல்லாமல் எப்படி அப்டேட்?
இதே உங்களது மொபைல் நம்பர் தொலைந்துவிட்டது. ஆக OTP இல்லாமல் மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கும் ஆப்சன் உண்டு. இதற்காக ஆதார் பதிவு அல்லது புதுப்பிப்பு மையத்திற்குச் செல்லவும். ஆதார் அப்டேட் Form நிரப்பவும். உங்களிடம் இருக்கும் மொபைல் எண்ணை Form இல் எழுதுங்கள். உங்கள் பழைய மொபைல் எண்ணை form இல் எழுத தேவையில்லை. உங்கள் கோரிக்கைப் பதிவு செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும். இதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
மொபைல் நம்பர் கட்டாயம் வேண்டும்?
ஏனெனில் நீங்கள் ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய UIDAI-யின் இணையத்தில் லாகின் செய்து தான் மாற்ற முடியும். ஏனெனில் உங்களுக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையெனில், உங்களால் எதையும் மாற்றம் செய்ய முடியாது. ஒரு வேளை நீங்கள் மொபைல் எண் பதிவு செய்யவில்லை எனில்., அருகில் உள்ள ஆதார் அப்டேட் செண்டர் தான் செல்ல வேண்டும்.
ஆதார் நம்பரை வைத்து லாகின் செய்யுங்கள்
ஆக UIDAI-யின் பக்கத்தினை லாகின் செய்து வெரிபிகேஷன் செய்த பிறகு உங்களது 12 இலக்க ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு, உங்கள் பதிவு எண்ணுக்கு ஒரு எஸ் எம் எஸ் வரும். அதில் ஒரு லிங்க் வரும். அந்த லிங்கினை கிளிக் செய்து agree என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு ஓடிபி எண் வரும். அதனை கொடுத்து, கேப்சா கோடினையும் பதிவும் செய்ய வேண்டும். இதன் பிறகு நீங்கள் SRN நம்பர் மொபைல் எஸ் எம் எஸ் வழியாக வரும். இப்போது SRN நம்பரை வைத்து, முகவரி அல்லது மொபைல் எண் மாற்றம் செய்யலாம். மாற்றம் செய்த பிறகு சப்மிட் கொடுக்கவும். சேவ் செய்து, சப்மிட் செய்யவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications