சென்னை: பேங்க் பரிவர்த்தனை முதல் வருமான வரித் தாக்கல் செய்வது வரை, அனைத்திற்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு உள்ளது. அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, போட்டோ, கையொப்பம், தந்தையின் பெயர், ஆதார், பாலினம், முகவரி போன்ற விவரங்கள் தவறாக இருந்தாலோ அல்லது மாறி இருந்தாலோ, பான் கார்டை சரி செய்வது அவசியம்.
இல்லையெனில், உங்கள் மற்ற ஆவணங்களில் வேறு விவரங்களும், உங்களுடைய பான் கார்டில் வேறு விவரங்களும் இருக்கும். உங்களுடைய அனைத்து அரசு சார்ந்த ஆவணங்களிலும் ஒரே மாதிரியான விவரங்களை வைத்திருத்தல் நல்லது. எனவே, இந்தப் பதிவில் பான் கார்டில், ஏதேனும் விவரங்கள் மாறி இருந்தால் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதைப் பார்ப்போம்.

ஆன்லைனில் பான் கார்டை எவ்வாறு புதுப்பிப்பது?: NSDL e-Gov இணையதளம் அல்லது UTIITSL இணையதளம் மூலம் பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கலாம். NSDL e-Gov இணையதளம் வழியாக நீங்கள் பான் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால், அதன் வழியாகப் பான் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கலாம். அதேபோல், UTIITSL இணையதளத்தில் பான் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால், அதன் வழியாக நீங்கள் பான் விவரங்களை அப்டேட் செய்யலாம்.
NSDL e-Gov போர்ட்டலில் PAN கார்டை எவ்வாறு புதுப்பிப்பது?:
ஸ்டெப் 1: NSDL e-Gov போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: 'Services' என்பதைக் கிளிக் செய்து, செலெக்ட் மெனுவிலிருந்து 'PAN' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: கீழே ஸ்க்ரோல் செய்து, 'Change/Correction in PAN Data' என்பதைக் கண்டறிந்து 'Apply' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: தற்போது ஸ்கிரீனில் தெரியும் விண்ணப்பத்தில் உங்கள் பெயர், பிறந்த தேதி / நிறுவனம், பான் நம்பர், மொபைல் நம்பர், ஈமெயில், கேப்ட்சா கோட் போன்ற விவரங்களை நிரப்பவும்.
ஸ்டெப் 5: 'Continue with PAN Application Form' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மூன்று வழிகள் உள்ளன. உங்களுக்குத் தகுந்த முறையை தேர்ந்தெடுத்து 'Submit' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: புதுப்பிக்கப்பட்ட பான் கார்டு உங்களுக்கு வேண்டும் என்றால் 'Yes' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆனால் அதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஸ்டெப் 8: ஸ்கிரீனில், கீழே ஸ்க்ரோல் செய்து ஆதார் நம்பரின் கடைசி நான்கு டிஜிட்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 9: இப்பொழுது ஸ்கிரீனில் எந்த விவரத்தைப் புதுப்பிக்க வேண்டுமோ அந்த பாக்ஸில் டிக் செய்து புதிய விவரங்களை என்டர் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 10: அதன் பிறகு, உங்களுடைய தற்போதைய பான் கார்டை அப்லோட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 11: டிக்ளரேஷன் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் இட விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 12: இப்பொழுது உங்களுடைய போட்டோகிராப் மற்றும் சிக்னேச்சர்-ஐ அதில் குறிப்பிடப்பட்ட அளவுடன் அப்லோட் செய்யவும்.
ஸ்டெப் 13: அனைத்தையும் முடித்த பிறகு 'Submit' என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 14: உங்களுடைய ஆதார் நம்பரின், முதல் 8 டிஜிட்களை என்டர் செய்து, உங்களுடைய பான் கார்டு-இன் ப்ரிவியுவைப் பார்க்கலாம்.
ஸ்டெப் 15: வெப்சைட்டின் அடுத்த பக்கத்தில், பான் கார்டில் நீங்கள் திருத்தம் செய்ய வேண்டிய தொகையை செலுத்தலாம். அதில் பல பேமெண்ட் கேட்வேக்கள் இருக்கும். உங்களுக்கு தகுந்த பேமெண்ட் தளத்தை பயன்படுத்திப் பணத்தை செலுத்த வேண்டும்.
ஸ்டெப் 16: அடுத்ததாக KYC செயல் முறையை சரிபார்க்க வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள சின்ன பாக்ஸில் டிக் செய்து 'Authenticate' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 17: உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு, தற்போது ஒரு OTP வரும். அதனை என்டர் செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 18: அடுத்த பக்கத்தில் 'Continue with e-sign' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 19: டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு இணங்கும் விதமாக கொடுக்கப்பட்டுள்ள சின்ன பாக்ஸில் டிக் செய்து 'Send OTP' என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு OTP நம்பரை என்டர் செய்து 'Verify OTP' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
UTIITSL போர்ட்டலில் PAN கார்டை எவ்வாறு புதுப்பிப்பது?:
ஸ்டெப் 1: முதலில் 'UTIITSL' போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: 'Change/Correction in PAN Card' என்பதன் கீழ் உள்ள 'Click to Apply' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: 'Apply for Change/Correction in PAN card details' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பான் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் கோரிக்கை பதிவு செய்யப்பட்ட உடன் உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வரும். 'Ok' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: உங்கள் பெயர் மற்றும் முகவரியை கொடுத்து 'Next Step' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து உங்களுடைய ஆன்லைன் அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்யவும்.
கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்களை பயன்படுத்தி திருத்தம் செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications