நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் பான் கார்டு என்பது அத்தியாவசியமாகிவிட்டது. இப்போது பல இடங்களில் ரெஜிஸ்டர் செய்வதற்கு முக்கியமான ஆவணங்களில் பான் கார்டும் ஒன்றாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு வங்கிக் கணக்கு தொடங்குவது, வீடு வாங்குவது, ஆதார் கார்டுடன் இணைப்பது போன்ற பல செயல்களுக்கும் பான் கார்டு பயன்படுகிறது. நிதிச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்குப் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் சிக்னேச்சரை புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமாகும். பான் கார்டை அப்டேட் செய்வதன் மூலம் நிதிச் சேவைகளை எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் பெறலாம்.
பான் கார்டில் உள்ள சிக்னேச்சர் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?:

ஸ்டெப் 1: தற்போதய புரோட்டியான் என்ற இணையதளத்தில் பான் விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: "Changes or Correction in existing PAN data" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு "Category" என்ற மெனுவின் கீழ் உள்ள "Individual" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: தேவையான விவரங்களை நிரப்பி "Submit" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஒரு டோக்கன் நம்பர் உருவாக்கப்படும்.
ஸ்டெப் 4: பின்னர் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும். இதற்கு ஆதார் அல்லது இஐடி போன்ற விவரங்கள் தேவைப்படும்.
ஸ்டெப் 5: பிறகு "Photo Mismatch" அல்லது "Signature Mismatch" என்ற பெட்டியைத் தேர்ந்தெடுத்து உங்களின் பெற்றோர் விவரங்களை நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 6: உங்களுடைய முகவரி விவரங்கள், மொபைல் நம்பர், அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதி விவரங்கள் ஆகியவற்றை வழங்கவும்.
ஸ்டெப் 7: ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 8: படிவத்தை ஒரு முறை சரி பார்த்துக்கொண்டு, திருத்தங்கள் இருந்தால் அதைச் சரி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்டேப் 9: விண்ணப்பிக்கும் நபர் இந்தியாவிற்கு உள்ளே இருக்கும் நபராக இருந்தால் ரூ. 110 பணம் செலுத்த வேண்டும். இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நபராக இருந்தால் ரூ. 1,020 பணம் செலுத்த வேண்டும்.
ஸ்டெப் 10: விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து தேவைப்படும் ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்டெப் 11: விண்ணப்பத்தை ட்ராக் செய்வதற்கு 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆஃப்லைன் மூலம் சிக்னேச்சர் மற்றும் புகைப்படத்தை மாற்றுவது எப்படி?:
ஸ்டெப் 1: "Request for New PAN Card or Changes/Correction in PAN Data" என்ற படிவத்தைப் பெற்று அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 2: விண்ணப்பப் படிவத்துடன் முகவரி, அடையாளச் சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை அட்டாச் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: அருகில் இருக்கும் என்எஸ்டிஎல் மையத்திற்குச் சென்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்டெப் 4: கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
ஸ்டெப் 5: விண்ணப்பத்தைத் ட்ராக் செய்வதற்கு 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பரை பயன்படுத்த வேண்டும்.
பான் கார்டைப் புதுப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்:அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பிறந்த தேதிக்கான சான்று, ஆதார் கார்டு ஜெராக்ஸ், பான் கார்டின் ஜெராக்ஸ், ஜெராக்ஸ், 3.5 செ.மீ x 2.5 செ.மீ புகைப்படம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications