ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்காகப் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வங்கி கணக்குகளைத் திறப்பது முதல், சிம் கார்டு பெறுவது வரை இந்தியாவில் உள்ள அதிகாரப்பூர்வ பணிகள் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படும். குறிப்பாக எனவே ஆதார் கார்டு தகவல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்ற வேண்டிய பெண்களுக்கும் இது பொருந்தும்.
ஆதாரில் உங்கள் குடும்பப் பெயரை மாற்றுவது எப்படி?:
ஆதார் சேவை மையத்தை பார்வையிடவும் நீங்களும் உங்கள் கணவரும் ஒன்றாக அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லலாம்.

திருத்த படிவத்தை பெறுங்கள்: ஆதார் பதிவு மையத்தில் ஒரு திருத்த படிவத்தை பெற்று அதில் உங்கள் ஆதார் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
படிவத்தை நிரப்பவும்: உங்களுடைய முழுப் பெயர், ஆதார் நம்பர், மொபைல் நம்பர் மற்றும் தேவையான பிற விவரங்களையும் கொடுத்து படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். அதில் நீங்கள் புதிதாக சேர்த்துக் கொண்ட குடும்பப் பெயர் உட்பட எந்தெந்த மாற்றங்களை செய்ய வேண்டுமோ அனைத்தையும் குறிப்பிடுங்கள். திருமணமான பெண்கள் என்றால் முகவரி மாற்றமும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தேவையான ஆவணங்களை வைத்திருக்கவும்: உங்கள் கணவரின் ஆதார் கார்டு, உங்கள் திருமண சான்றிதழ் போன்ற ஆதார் அப்டேட்டுக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் உங்களுடன் வைத்திருங்கள்.
படிவத்தை சமர்ப்பிக்கவும்: நிரப்பப்பட்ட படிவத்தை ஆதார் பதிவு மையத்தில் சமர்ப்பியுங்கள்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு: உங்கள் பயோமெட்ரிக் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்படும். மேலும் புதிய புகைப்படம் எடுக்கப்படும்.
கட்டணத்தை செலுத்துங்கள்: இந்த புதிய அப்டேட்டுக்கு ஒரு சிறிய செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் குடும்பப் பெயர் சில நாட்களுக்குள் உங்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்யப்படும். மேலும் செயல்முறை முடிந்ததும் அதற்கான எஸ்எம்எஸ் அல்லது மெயில் உங்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் ஆதார் கார்டில் உங்கள் பெயரை 2 முறை மட்டுமே மாற்றி அமைக்க முடியும். அதற்கு மேல் மாற்றியமைக்க பிராந்திய UIDAI அலுவலகத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும். மேலும் குறிப்பிட்ட சில சூழ்நிலையில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். பெயர் மாற்றங்களைப் போலன்றி, உங்கள் முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப பல முகவரி மாற்றங்களைச் செய்யலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications