நாட்டில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொருவரும் தங்களுடைய ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகன உரிமையாளர் சான்றிதழில் (Registration Certificate தொலைபேசி எண்ணைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அரசின் அனைத்துச் சேவைகளையும், முக்கியமான அறிவிப்புகளையும் உடனடியாகப் பெறவும், மோசடிகளை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் லைசன்ஸுக்கு மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி..? : மொபைல் நம்பரை புதுப்பிக்க வாகன ஓட்டிகள் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவாகன் (Parivahan) இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே இந்தப் பணியை செய்து முடிக்கலாம்.

முதலில், parivahan.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். அடுத்து, இணையதளத்தில் உள்ள "Online Services" பிரிவுக்குச் சென்று, அதில் "Driving Licence Related Services" என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உங்களது மாநிலத்தை தேர்ந்தெடுத்த பிறகு, இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள "Update Mobile Number" அல்லது "DL Services - Mobile Number Update" என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு, உங்களது ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களைச் சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். தற்போதைய மொபைல் எண் திரையில் தோன்றினால், அதை சரிபார்த்து, அதன் பின் புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உள்ளீடு செய்த புதிய எண்ணுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்து, அதை சமர்ப்பித்தவுடன் உங்களது ஓட்டுநர் உரிமத்துடன் புதிய எண் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுவிடும்.
ஆர்.சி.-க்கான மொபைல் எண் புதுப்பிப்பு : வாகனப் பதிவேட்டில் (RC Book) மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, மீண்டும் பரிவாகன் தளத்திற்கே செல்ல வேண்டும். பரிவாகன் இணையதளத்தில் "Vehicle Related Services" என்பதைத் தேர்ந்தெடுத்து, "Vehicle Registration" பகுதியில் உள்ள "Update Mobile Number" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
அங்கு உங்களது ஆர்.சி. எண், சேசிஸ் எண், இன்ஜின் எண் போன்ற வாகனத்தின் அத்தியாவசிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு புதிய மொபைல் எண்ணைப் பதிவிட்டு, OTP மூலம் அதை உறுதிப்படுத்தினால், உங்களது வாகன உரிமையாளர் சான்றிதழுடன் புதிய எண் இணைக்கப்படும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலம் புதுப்பித்தல் : ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முடியாதவர்கள் அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) நேரில் சென்று இந்தச் சேவையைப் பெறலாம். அலுவலகத்தில் "Mobile Number Update for DL/RC" என்ற படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் உங்களது சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை (ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது வாக்காளர் அட்டை) இணைக்க வேண்டும். பின், அங்குள்ள அலுவலர்கள் உங்களது ஆவணங்களை சரிபார்த்த பின்னர், உங்களது புதிய தொலைபேசி எண்ணைப் பதிவு செய்வார்கள்.
கவனிக்க வேண்டியவை : புதுப்பித்தல் செயல்முறை முடிந்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் உறுதிப்படுத்தல் தகவல் வரும். ஆதார் எண்ணுடன் மொபைல் எண் பொருந்தினால், சில மாநிலங்களில் eKYC மூலம் விரைவான புதுப்பிப்பு வசதி உள்ளது. இந்த எண் மாற்றம், mParivahan மற்றும் DigiLocker போன்ற டிஜிட்டல் பயன்பாடுகளிலும் உடனடியாக செயல்பட தொடங்கும்.
உங்களது வாகன ஆவணங்களில் சரியான மொபைல் எண் இணைந்திருந்தால் மட்டுமே, அரசாங்க அறிவிப்புகள், அபராதத் தகவல்கள் மற்றும் புதுப்பித்தல் நினைவூட்டல்களை தவறாமல் பெற முடியும். இது பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அனைத்து ஆன்லைன் சேவைகளையும் நிம்மதியாக பயன்படுத்த வழிவகுக்கும். எனவே, தாமதிக்காமல் உங்களது தொலைபேசி எண்ணை இப்போதே புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications