இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதியை ஆன்லைன் வழியாக வழங்கி வருகிறது. இதன் மூலம், வீடு வாங்குதல், வாடகை வீட்டை மாற்றி செல்லுதல் போன்ற காரணங்களால் முகவரி மாற்றம் ஏற்படும்போது, வாக்காளர்கள் எளிதாக தங்களது விவரங்களைப் புதுப்பிக்கலாம்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்கான சேவைகளை ஆன்லைன் வாயிலாக அளிப்பதில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இதன் வாயிலாகத் தான் முதல் பட்டா, சிட்டா வாங்குவது முதல் அனைத்தையும் ஆன்லைன் மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றத்தை ஆன்லைனில் மூலம் செய்யும் வழிமுறையை இப்போது பார்ப்போம்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திற்குச் செல்லவும்: உங்கள் மாநிலம் (https://voters.eci.gov.in)தேர்தல் தொடர்பான இணையதளத்திற்குச் சென்று, "Online Voter Registration" என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான நேரடி
படிவம் 8-ஐ தேர்ந்தெடுக்கவும்: இந்த பக்கத்தில் காட்டப்படும் பல்வேறு விருப்பங்களில் இருந்து, "Form 8" என்ற விருப்பை தேர்ந்தெடுக்கவும். இந்த படிவம், வாக்காளர் விவரங்களை திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
பதிவு செய்யவும்: புதிய பக்கத்தில், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட் மூலம் பதிவு செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் மொபைலுக்கு ஒரு OTP (One Time Password) அனுப்பப்படும். இந்த OTP-ஐ உள்ளீட்டு பெட்டியில் பதிவு செய்யவும்.
விவரங்களை நிரப்பவும்: உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீட்டு பெட்டியில் பதிவு செய்யவும். பின்னர், திறக்கும் படிவம் 8-இல் உங்கள் பெயர், பழைய முகவரி, புதிய முகவரி, மாநிலம், தொகுதி போன்ற விவரங்களை கேட்கப்படும் இடங்களில் துல்லியமாக நிரப்பவும்.
ஆதார் அட்டை விவரங்கள்: உங்கள் ஆதார் அட்டை எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணத்தை பதிவேற்றவும்: உங்கள் புதிய முகவரியை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார பில், வங்கி பாஸ்புத்தகம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தின் நகலை பதிவேற்றவும்.
படிவத்தை சமர்ப்பிக்கவும்: அனைத்து விவரங்களையும் பதிவு செய்து, ஆவணத்தை பதிவேற்றிய பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும்.
குறிப்பு எண்: உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.
சரிபார்ப்பு மற்றும் புதிய அட்டை: உங்கள் விண்ணப்பம் தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் புதிய முகவரியுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


Click it and Unblock the Notifications