ஆதார் கார்டு நம் நாட்டில் உள்ள அடையாள ஆவணங்களில் மிக முக்கியமான ஆவணமாகும். எனவே ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஒரு வேலை இந்த விபரங்களில் பிழை இருந்தால் அவற்றை உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும். டிசம்பர் 14-ஆம் தேதி வரை ஆதார் விவரங்களை இலவசமாக திருத்திக்கொள்ள இந்திய தனித்துவ அடையாள அணையம் (UIDAI) ஏற்பாடு செய்துள்ளது. அதோடு வீடு மாறியவர்கள் தங்கள் முகவரி விவரங்களை ஆதார் கார்டில் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு விவரங்களையும் புதுப்பிக்க வரம்பை வைத்துள்ள UIDAI முகவரி புதுப்பிப்புகளுக்கு எந்தவித வரம்பையும் அமைக்கவில்லை. உதாரணமாக பெயரை புதுப்பிக்க 2 முறை மட்டுமே முடியும். திருமணமான பெண்கள் தங்கள் கணவரை பெயரை சேர்த்துக்கொண்டு பயன்படுத்துவது இன்னும் சில ஊர்களில் உள்ளது.

எனவே இது போன்ற காரணங்களுக்காக உங்களுடைய பெயரை 2 முறை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு மேல் மாற்ற UIDAI-இன் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால் முகவரி மாற்றத்திற்கு வரம்பே இல்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் குடிபெயரும்போது உங்களுடைய முகவரியை ஆதாரில் மாற்றிக் கொள்ளலாம். அதுவும் டிசம்பர் 14 வரை எந்தவித கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அதன் பிறகு மாற்றம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். சில விவரங்களை நீங்கள் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது.
ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் நம்பர் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 3: கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரி பார்க்கவும். இதில் ஏதேனும் மாற்ற வேண்டியிருந்தால் அவற்றை செய்யலாம் உதாரணமாக உங்களுடைய அட்ரஸ் விவரங்களில் மாற்றம் இருந்தால் அவற்றை செய்து கொள்ளலாம்.
ஸ்டெப் 4: அதன் பிறகு அதற்கான POA ஆவணத்தை JPEG, PNG மற்றும் PDF ஃபார்மேட்டுகளில் அப்லோட் செய்ய வேண்டும். கண்டிப்பாக பைலின் அளவு 2 எம்பிக்கு குறைவாக இருக்க வேண்டும். உங்களுடைய டாக்குமெண்ட் அப்லோட் செய்யப்பட்ட பிறகு எஸ்ஆர்என் நம்பர் வழங்கப்படும். இந்த எஸ்ஆர்என் நம்பரை வைத்து ஆதார் புதுப்பிப்பு குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications