டெல்லி: பான் கார்டு அல்லது பெர்மனெண்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) என்பது தனித்துவமான 10 இலக்க எண்ணாகும். இது இந்திய வரித்துறையின் கீழ் லேமினேட் செய்யப்பட்ட கார்டாக வழங்கப்படுகிறது. இது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. பான் கார்டில் உங்களுடைய அனைத்து விவரங்களும் சரியானதாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் பான் கார்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
உங்கள் பான் கார்டின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பெயரில் ஏதேனும் பிழை இருந்தால், நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளலாம். உங்கள் பான் கார்டில் உள்ள பெயரில் திருத்தங்களைச் செய்வது ஒன்றும் கடினம் அல்ல. பான் கார்டு பெயர் திருத்தத்திற்காக, ஒரு தனிநபர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பான் கார்டில் பெயரை திருத்த, நீங்கள் கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.

ஆன்லைன் மூலம் பான் கார்டில் உள்ள பெயரை திருத்துவது எப்படி?:
ஸ்டெப் 1: NSDL அமைப்பின் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: தற்போது திரையில் காண்பிக்கும், "Apply Online" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் "Application Type" என்பதன் கீழ் "Changes or correction in existing PAN Data/ Reprint of PAN Card (No changes in existing PAN data)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: "Category" என்ற பிரிவின் கீழ், "Individual" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின், பின்வரும் விவரங்களை என்டர் செய்யவும். பெயர், பிறந்த தேதி, மெயில் ஐடி, சிட்டிசன்ஷிப் (நீங்கள் இந்திய குடிமகனா என்பது), பான் நம்பர் போன்றவற்றை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 4: தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கிய பிறகு, "By submitting data to us and/or using our NSDL e-Gov TIN website" என்ற செக்பாக்ஸ்-ஐ கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்து, பின்னர் "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் வழங்கிய மெயில் ஐடி முகவரிக்கு டோக்கன் எண்ணுடன், உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் செய்தி கிடைக்கும். "NSDL e-Gov இன் ஆன்லைன் பான் விண்ணப்பச் சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி. உங்கள் கோரிக்கை டோக்கன் எண் xxxxxxxx என்ற எண்ணுடன் வெற்றிகரமாகப் பதிவுசெய்யப்பட்டது, மேலும் அது PAN விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டெப் 7: அதன்பின் "Continue with PAN Application Form" என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் ஆன்லைன் பான் விண்ணப்ப பக்கத்திற்கு திசைதிருப்பப்படுவீர்கள்.
குறிப்பு: உங்கள் பான் கார்டில் உள்ள புகைப்படம் அல்லது கையெழுத்தை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்றால், அந்தப் பக்கத்தில் உள்ள "Photo Mismatch" அல்லது "Signature Mismatch" என்பதைக் கிளிக் செய்யவும்.
அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்டதும், ஒப்புகை சீட்டு உருவாக்கப்படும். அதை பிரிண்ட் எடுத்து, பிற ஆவணங்களோடு சேர்த்து NSDL e-gov அலுவலகத்திற்கு அனுப்பவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications