ATM கார்டு இல்லாமல் இந்தியாவில் உள்ள எந்த ஏடிஎம்களில் இருந்து வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த புதிய வித்ட்ராவல் முறையை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். இதை தெரிந்து கொண்டால் நீங்களும் ஏடிஎம் கார்டு எடுத்துச் செல்லாமலேயே UPI ஆப்களின் மூலம் எளிதில் ஏடிஎம் மெஷின்களில் இருந்து பணம் எடுக்கலாம்.
தற்போது அனைத்திற்கும் கூகுள் பே (Google Pay) மற்றும் போன் பே (Phone Pay) செயலிகளைத் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். கையில் பணம் எடுத்துச் சென்று தேவையானவற்றை வாங்கிக் கொள்வதை விட எளிதில் QR கோடுகளை ஸ்கேன் செய்து பேமெண்ட் செலுத்தி வருகிறோம். இதன் அடுத்த கட்டமாக தற்போது இதே யுபிஐ ஆப்களைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை "Interoperable Card-less Cash Withdrawal" என்று அழைக்கின்றனர்.

யபிஐ அப்ளிகேஷன் மூலம் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எப்படி?: இந்த புதிய செயல்முறையை வைத்து வங்கி வாடிக்கையாளர்கள் எந்த ஏடிஎம்-களில் இருந்து வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். இந்த சேவை தற்போது பல்வேறு வங்கிகளின் ஏடிஎம்களிலும் கிடைக்கிறது. கார்ட்லெஸ் ஏடிஎம் பரிவர்த்தனைக்கு உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் இருந்தால் போதுமானது. இதன் மூலம் எளிதில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய யுபிஐ அப்ளிகேஷன்களை வைத்து ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்.
ஏடிஎம்-இல் இருந்து UPI ஆப்ஸ் மூலம் எவ்வாறு பணம் எடுப்பது?:
ஸ்டெப் 1: முதலில் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்குச் சென்று டிஸ்ப்ளேவில் தெரியும் "UPI cash withdrawal at the ATM" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: தற்போது நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை என்டர் செய்யவும். ஆனால் இந்த முறையைப் பயன்படுத்தி 10,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
ஸ்டெப் 3: அதன் பின் ஏடிஎம் டிஸ்ப்ளேவில் QR கோடு காண்பிக்கப்படும். அதை உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் யுபிஐ அப்ளிகேஷன் மூலம் ஸ்கேன் செய்யவும்.
ஸ்டெப் 4: அடுத்ததாக நீங்கள் பயன்படுத்தும் யூபிஐ அப்ளிகேஷனில் பின் நம்பரை என்டர் செய்யவும். இந்த செயல்முறை முடிந்த பின்னர் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் போது பணம் வெளியில் வருவது போலவே நீங்கள் என்டர் செய்த தொகை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியில் அனுப்பப்படும்.
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க வேண்டும்.. ஆனால் வீட்டிலேயே ஏடிஎம் கார்டுகளை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டால் இந்த முறையை பயன்படுத்தி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications