சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதன்மை திட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாயை உரிமை தொகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் விண்ணப்பம் செய்ய முடியவில்லை என கூறி வந்த பெண்களுக்காகவே அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெண்கள் உரிமைத் தொகை விண்ணப்பங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

45 நாட்களில் முடிவு: இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்பட்டு விண்ணப்பதாரருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்து விடும். மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் அட்டை அடிப்படையில் தான் குடும்ப தலைவி என்பவர் தேர்வு செய்யப்படுகிறார். ரேஷன் கார்டில் குடும்ப தலைவியாக இருப்பவர் அல்லது குடும்ப தலைவராக இருப்பவரின் மனைவி விண்ணப்பம் செய்யலாம். இவர் 21 வயது நிரம்பிய மகளிராக இருக்க வேண்டும், ஏற்கனவே குடும்பத்தில் எவரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள் என்னென்ன?: அதே போல 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த தலைவிகளும் தகுதி பெறுகின்றனர்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், பராமரிப்பு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் நபர்களை தவிர அக்குடும்பத்தில் மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்க கூடாது: குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் இருந்தால் அந்த குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கக் கூடாது , சொந்தப் பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது. ஆனால் அரசுதிட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள் தேவை: மேலே கூறிய தகுதிகளை பூர்த்தி செய்யும் பெண்கள் உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி சமர்ப்பிக்கலாம். முகாமுக்கு செல்ல கூடிய பெண்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். முகாமில் விண்ணப்பம் வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தை அங்கே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். 45 நாட்களில் உங்களுக்கு பணம் கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
முகாம் விவரங்கள்: பொதுமக்கள் தங்கள் மாவட்டத்தில் தங்கள் பகுதியில் எந்தெந்த இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடக்கின்றன என்பதை எளிமையாக அறிந்து கொள்வதற்கு அரசு பிரத்தேக இணையதளத்தையும் வழங்கி இருக்கிறது. https://ungaludanstalin.tn.gov.in/camp.php இந்த இணையதளத்திற்கு சென்று தங்களுடைய மாவட்டம் மற்றும் தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால் மக்கள் தங்கள் பகுதியில் எங்கெல்லாம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் .
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications