ரூ.5 லட்சத்தை FD-ல் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பெரும்பாலும் ஃபிக்ஸட் டெபாசிட்களைத் தேர்வு செய்கிறார்கள். வட்டி வடிவில் இவற்றில் நிலையான வருமானம் வழங்கப்படுகிறது. அதனால்தான் வாடிக்கையாளர்களை கவர அரசு மற்றும் தனியார் வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பெரும்பாலான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அதிகப்படியான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

தற்போது எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற வங்கிகள் நல்ல வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் இப்போது ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் எந்த வங்கியில் எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கலாம்.

 ரூ.5 லட்சத்தை FD-ல் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

எஸ்பிஐ: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஒரு வருட கால நிரந்தர வைப்புத்தொகைகளுக்கு பொது வைப்பாளர்களுக்கு மூன்று ஆண்டு, ஐந்தாண்டு மற்றும் ஒரு வருடத்திற்கு இந்த குறிப்பிட்ட வட்டியை வழங்குகின்றனர். அவை 6.80 சதவீதம், 6.75 சதவீதம் மற்றும் 6.50 சதவீதம் வட்டியை வழங்குகிறது. அந்த வகையில், ஒருவர் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 34,877 வட்டியுடன் ரூ. 5,34,877 ஆக கிடைத்திருக்கும். அதே மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 6,11,196 ஆகவும், ஐந்து ஆண்டுகள் ஆனால் ரூ. 6,90,210 ஆக கிடைத்திருக்கும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி: ஒரு வருட கால வைப்புகளுக்கு 6.80 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மூன்று ஆண்டு மற்றும் ஐந்தாண்டு காலத்திற்கு, வட்டி விகிதங்கள் 7 சதவீதம் மற்றும் 6.50 சதவீதம் வட்டியை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் ரூபாயை ஒரு வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் 5,34,877 ஆக உயரும். மூன்று ஆண்டுகள் ரூ. 6,15,720 ஆக உயர்ந்திருக்கும் மற்றும் ஐந்து ஆண்டுகள் ஆனால் ரூ. 6,90,210 ஆக உயர்ந்திருக்கும்.

கனரா வங்கி: இந்த வங்கி ஒரு வருட கால டெபாசிட்டுகளுக்கு 6.85 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. வட்டி விகிதம் மூன்று ஆண்டுகளுக்கு 6.80 சதவீதமாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு 6.70 சதவீதமாகவும் இருக்கும். இந்த வங்கியில் 5 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் ரூ. 5,35,140 ஆகவும், மூன்று ஆண்டுகளில் ரூ. 6,12,099 ஆகவும், ஐந்து ஆண்டுகளில் ரூ. 6,97,033 ஆகவும் உயர்ந்திருக்கும்.

பேங்க் ஆஃப் பரோடா: இந்த வங்கி ஒரு வருட கால டெபாசிட்டுகளுக்கு 6.85 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு 7.15 சதவீதமும், ஐந்தாண்டுகளுக்கு 6.80 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கியில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்திருந்தால் ஒரு ஆண்டில் ரூ. 5,35,140 ஆக உயர்ந்திருக்கும். அதுவே, மூன்று ஆண்டுகளுக்கு ரூ.6,18,448 ஆகவும், ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 7,00,469 ஆக இருக்கும்.

எச்டிஎஃப்சி வங்கி: ஒரு வருட கால டெபாசிட்டுகளுக்கு 6.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கியில் ரூ.5 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருந்தால். ஒரு ஆண்டில் ரூ.5,33,826 ஆகவும், மூன்று ஆண்டுகளில் ரூ. 6,15,720 ஆகவும் மற்றும் ஐந்து ஆண்டுகளில் ரூ. 7,07,389 ஆகவும் உயர்ந்திருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+