உங்கள் CIBIL ஸ்கோர் மோசமாக இருக்கும்பட்சத்தில் அதை அதிகரிக்க விரும்புவர்கள் சிபில் ஸ்கோரை எவ்வளவு நாட்களில் எப்படி அதிகரிக்கலாம் என்ற யோசனைகளும், கேள்விகளும் உங்களுக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கும். சிபில் ஸ்கோர் நல்ல நிலைமையில் இருக்கும்போது வருமானத்திற்கு அதிகமான கடன் வாங்குவது, அதிக கடன் வாங்கியதுடன் அதை திருப்பி செலுத்த முடியாத நிலையில் சிபில் ஸ்கோர் குறைவதுடன் பல்வேறு சிக்கல்களில் சிக்குவது என பல பிரச்சனைகளும் இருக்கும். அந்த வகையில், சிபில் ஸ்கோர் தொடர்பான சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்
CIBIL ஸ்கோர் ஆனது உங்கள் நிதி வரலாற்றை பிரதிபலிக்கிறது. இது உங்கள் முந்தைய கடனை திருப்பிச் செலுத்தும் வரலாறு எப்படி இருந்தது என்பதை காட்டுகிறது. நீங்கள் வங்கியில் கடன் வாங்க விரும்பினால், உங்கள் சிபில் ஸ்கோரின் அடிப்படையில் மட்டுமே வங்கி உங்களுக்கு கடனை வழங்கும். ஒரு நல்ல சிபில் ஸ்கோர் உங்கள் கடன் அனுமதியை எளிதாக்கும். மோசமான சிபில் ஸ்கோர் இருந்தால், வங்கியில் கடன் பெறுவது கடினமாகிவிடும். மேலும், அதிக வட்டி விகிதத்தில் கடனும் கிடைக்கும். இது தவிர, சிபில் ஸ்கோர் உங்கள் கிரெடிட் கார்டு வரலாற்றையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துவதும் நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருப்பதற்கு முக்கியமானது. உங்கள் சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதை எப்படி அதிகரிப்பது. இதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சிபில் ஸ்கோரை அதிகரிக்க எவ்வளவு நாள் ஆகும்?: உங்கள் சிபில் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் சிறிது நாட்கள் செலவிட வேண்டியிருக்கும். மோசமான சிபில் ஸ்கோரை ஓரிரு நாட்களில் மேம்படுத்த முடியாது. இதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது 1 வருடம் அவகாசம் கொடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் உங்களின் அனைத்து பில்களையும் EMI களையும் சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். கடனை விரைவாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போதும் கவனமாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள். தாமதமாக பில் செலுத்துவதை தவிர்க்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் CIBIL ஸ்கோரை 6 மாதங்கள் அல்லது 1 வருடத்தில் மேம்படுத்தலாம்.
சிபில் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும்?: உங்கள் சிபில் ஸ்கோர் 300 முதல் 550 வரை இருந்தால், ஸ்கோர் மோசமாகக் கருதப்படும். அதுவே 550க்கு மேல் இருந்தால் சராசரியாகக் கருதப்படுகிறது. 750க்கு மேல் இருந்தால், உங்கள் சிபில் ஸ்கோர் நன்றாக இருப்பதாக கருதப்படும். அத்துடன் வங்கிகள் உங்களுக்கு எளிதில் கடன் வழங்குவதுடன், விரைவான குறைந்த வட்டியில் கடன் வழங்கும்.


Click it and Unblock the Notifications