சென்னை: 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் ஆன்லைன் வாயிலாக இலவச சான்றிதழ் படிப்புகளை படிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. இதுவரை 2 படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அதனை 10 ஆக உயர்த்தி ஐஐடி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இருக்கும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடி வழங்கக்கூடிய இந்த இணைய வழி படிப்புகளில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னை ஐஐடி நிர்வாகம் ஸ்கூல் கனெக்ட் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போதைக்கு இந்த திட்டத்தின் கீழ் டேட்டா சயின்ஸ் & ஏஐ , எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இரண்டு படிப்புகளை தான் வழங்கி வந்தது. தற்போது அத்துடன் கூடுதலாக 8 படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

எட்டு வாரங்கள் கொண்டதாக இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்ய வேண்டும் என விரும்பும் மாணவர்கள் https://code.iitm.ac.in/schoolconnect/ இந்த இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இருந்த டேட்டா சயின்ஸ் அண்ட் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகியவற்றோடு சேர்த்து இந்த முறை ஆர்க்கிடெக்சர் மற்றும் டிசைன் , இன்ஜினியரிங் பயாலஜிக்கல் சிஸ்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் பாடங்கள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வி .காமகோடி இந்த படிப்புகள் வளர்ந்து வரும் துறைகளைப் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே தூண்டும் என்றும் இந்த வகுப்புகளில் சேர்ந்த பயில கூடிய மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிய கண்டுபிடிப்பாளர்களாக உருவாக இவை உதவும் என்றும் தெரிவித்திருக்கிறார். பள்ளிக்கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையிலான இடைவெளிகளை குறைக்கும் நோக்கத்துடனே ஐஐடி சென்னை சான்றிதழ் படிப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார். மாணவர்கள் இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் அனைவரும் பயன்பெற வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த பயிற்சி திட்டங்களில் சேர்ந்து பயில்வதன் மூலம் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலேயே இந்த பாடங்களுக்கான அறிமுகங்களை பெறும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் தாங்கள் எந்த பிரிவில் செல்லலாம், எந்த பிரிவில் எதிர்காலம் இருக்கிறது புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவது உள்ளிட்ட தெளிவுடன் முடிவெடுக்க முடியும். இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் வகுப்புகளை கவனிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு அசைன்மென்ட் மற்றும் ப்ராஜெக்ட் உள்ளிட்டவையும் வழங்கப்படுவதால் பயிற்சியுடன் கூடிய அனுபவமாக இது இருக்கும்.
ஒரு ஆண்டுக்கு மூன்று வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி, ஆகஸ்ட் , அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களிலும் வகுப்புகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆண்டுக்கு மூன்று படிப்புகளில் சேர்ந்து பயில முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications