சென்னை: இன்று கிரெடிட் கார்டுகள் பெற்று செலவு செய்து, பிறகு கடனைச் செலுத்துவது எளிதான ஒன்றாகிவிட்டது. மேலும், அவரவர் செலவுகளின் வகைக்கு ஏற்ப கிரெடிட் கார்டு வழங்குனர்களைத் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டுகளைப் பெறுகின்றனர். சில நேரங்களில் நமக்கு எதிர்பாராத விதமாக கிரெடிட் கார்டுகள் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ என்ன நடக்கும் என்று யோசித்ததுண்டா.. அப்படி உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து போனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்வதை நம்மால் தடுக்க முடியும். உங்கள் கிரெடிட் கார்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது ஏதேனும் தெரியாத பரிவர்த்தனைகளை நீங்கள் கண்டாலோ உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு பிளாக்: உங்களுக்கு கிரெடிட் கார்ட் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ நீங்கள் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையை தடுக்க உடனே உங்களுடைய கிரெடிட் கார்டை பிளாக் செய்யலாம். நீங்கள் கிரெடிட் கார்ட் பெற்ற வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு வங்கியின் நெட் பேங்கிங் மூலம் நீங்களே அதை செய்து கொள்ளலாம். உங்களுக்கு கிரெடிட் கார்டை இது போன்ற சிறிய நடவடிக்கையை பயன்படுத்தி பிளாக் செய்வதால் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க முடியும்.
FIR பதிவு செய்யுங்கள்: உங்களுடைய கிரெடிட் கார்டு தொலைந்து போனது குறித்து வங்கிக்கு தெரிவித்த உடன், நீங்களே அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று FIR பதிவு செய்யலாம். இதற்குப் பிறகு திருடப்பட்ட கிரெடிட் கார்டைக் கொண்டு மற்றவர்கள் அதனைத் தவறாகப் பயன்படுத்தி செய்யும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் பொறுப்பல்ல என்பதை காட்டும் விதமாக உங்களுடைய FIR இருக்கும். மேலும் இது ஒரு சட்டபூர்வ ஆதாரமாகவும் மாற்று கிரெடிட் கார்டு விண்ணப்பத்திற்கு இந்த FIR உதவியாகவும் செயல்படுகிறது.
கிரெடிட் பீரோவை தொடர்பு கொள்ளவும்: மக்கள் பெரும்பாலும் கிரெடிட் கார்டுகள் தவறவிட்டாலோ தொலைந்து போனாலும் அதை பற்றி கிரெடிட் கார்டு பீரோவுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மோசமாக பாதிக்கலாம்.
பரிவர்த்தனைகளை தொடர்ந்து கவனிக்கவும்: உங்கள் கிரெடிட் கார்ட் தொலைந்த கையோடு கிரெடிட் அறிக்கைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதன் பிறகு நடக்கும் எந்த ஒரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் பொறுப்பல்ல என்பதை நினைவில் வைத்து தொடர்ந்து கண்காணியுங்கள். இல்லையேல் பிறர் செலவு செய்யப்பட்ட தொகைக்கு நீங்கள் பணத்தை திருப்பி செலுத்தும் நிலை கூட ஏற்படலாம்.
ஆர்பிஐ விதிகளின்படி மோசடியாக, இது போன்ற பரிவர்த்தனைகள் காணாமல் போன கிரெடிட் கார்டுகளைக் கொண்டு நடந்தால், வங்கிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அதிக நேரம் எடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்பதால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு வாடிக்கையாளர்கள் விரைவில் நடந்த விஷயத்தை கூற வேண்டும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications