வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துவிட வேண்டும். இந்நிலையில் இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அதனை எளிமையாக செய்வதற்கான வழிமுறைகள் பார்க்கலாம்.
2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான (அதாவது, 2024-25 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ITR படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் புதிய ITR பயன்பாடுகளைச் செயல்படுத்தத் தேவைப்படும் நேரம் கருதி வழக்கத்தை விட கூடுதலாக 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

தேவையான ஆவணங்கள்: வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 16, படிவம் 26AS, AIS , PAN அட்டை, ஆதார் அட்டை , முதலீட்டுச் சான்றுகள் (வங்கி வைப்புத்தொகை, PPF, மூலதன ஆதாய அறிக்கை), வீட்டுக் கடன் வட்டிச் சான்றிதழ், மற்றும் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
ITR-1 (சஹஜ்): சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பது சரியான வரி தாக்கலுக்கு அவசியம். இதன்படி, ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் தனிநபர்கள், சம்பளம், வீட்டுச் சொத்து, குடும்ப ஓய்வூதியம், விவசாய வருமானம் மற்றும் பிற மூலங்களிலிருந்து வருமானம் பெறுபவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.
ITR-2: ITR-1 தாக்கல் செய்ய முடியாத தனிநபர்கள், வணிகம் அல்லது தொழில் வருமானம் இல்லாதவர்கள், அல்லது கூட்டாண்மை நிறுவனங்களிலிருந்து வட்டி, சம்பளம், போனஸ், கமிஷன் போன்ற வருமானம் இல்லாதவர்கள் ITR-2 ஐப் பயன்படுத்தலாம்.
ITR-3: வணிகம் அல்லது தொழில் வருமானம் உள்ள வரி செலுத்துவோர் அல்லது HUF-கள் ITR-1, ITR-2 அல்லது ITR-4 இல் தாக்கல் செய்ய முடியாதவர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து ஃப்ரீலான்சர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் ITR-3 இன் கீழ் வரி தாக்கல் செய்கின்றனர்.
ITR-4 (சுகம்): நிதியாண்டில் ₹50 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் உள்ள வரி செலுத்துவோருக்கான படிவம் இது. பிரிவுகள் 44AD, 44ADA அல்லது 44AE இன் கீழ் வணிகம் மற்றும் தொழில் வருமானம் கணக்கிடப்பட்டால், மற்றும் பிரிவு 112A இன் கீழ் உங்கள் நீண்ட கால மூலதன ஆதாயம் ₹1,25,000 ஐ தாண்டவில்லை என்றால் இது பொருந்தும்.
ITR-5: நிறுவனங்கள், லிமிடெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப்கள் (LLPகள்), தனிநபர்களின் அமைப்புகள் (BOIகள்), இந்தப் படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்ய வேண்டும்.
26AS & AIS விவரங்களைச் சரிபார்த்தல்: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 26AS மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை (AIS) இல் உள்ள அனைத்து வருமானங்களையும் சரிபார்த்து அனைத்தும் ஒத்து போகிறதா என்பதை கணக்கிடுவது அவசியம். அதே போல படிவம் 16இல் இருக்கும் தகவல்கள் , வட்டி வருமானம் , மூலதன ஆதாயம் ஆகிய அனைத்தையும் சரிபார்த்து கொள்வது அவசியம்.
எப்படி கணக்கு தாக்கல் செய்வது: வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலில் லாகின் செய்ய வேண்டும். இந்த தளத்தில் இருந்து படிவம் 26AS மற்றும் AIS ஐப் பதிவிறக்கம் செய்யவும். உங்கள் வருமானம் மற்றும் TDS உடன் விவரங்களைச் சரிபார்க்கவும். உங்கள் வருமான அமைப்புக்கு ஏற்ப சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட வருமானம் மற்றும் கழிவுகளின் விவரங்களை உள்ளிடவும். இதனை அடுத்து கணக்கு தாக்கலை தொடங்கி சமர்ப்பிக்கவும்.
ஓடிபி மூலம் சரிபார்த்தல்: கணக்கைத் தாக்கல் செய்த பிறகு, 30 நாட்களுக்குள் உங்கள் ITR ஐச் சரிபார்ப்பது அவசியம். சரிபார்க்கப்படாவிட்டால், அது தாக்கல் செய்யப்படாததாகக் கருதப்படும். ஆதார் OTP, மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC), நெட் பேங்கிங் அல்லது ITR-V இன் கையொப்பமிட்ட அஞ்சல் நகலை அனுப்புவதன் மூலம் உங்கள் வருமான வரி கணக்கு தாக்கலை சரிபார்க்கலாம்.
இறுதி தேதியை கடந்துவிட்டால்: செப்டம்பர் 15 காலக்கெடுவைத் தவறவிட்டால், 5 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உள்ள தனிநபர்களுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வரிக்குரிய வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச அபராதம் 1,000 ரூபாய் ஆகும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications