ITR ரீஃபண்ட் எப்போது அக்கவுண்டுக்கு வரும்? ஈ-ஃபைலிங் இணையதளத்தில் 2 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்!

வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டு ரீஃபண்ட் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். ஒரு சில நபர்கள் தாங்கள் ஐடிஆர் தாக்கல் செய்த 24 மணி நேரத்திற்குள் ரீஃபண்ட் தொகையை பெற்று விட்டதாக சோசியல் மீடியா தளங்களில் பகிர்ந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்னும் வேகமாக ப்ராசஸ் ஆவதாகவும் கூறி வந்தனர். ஆனால் ஒரு சிலருக்கு இன்னமும் தொகை வராமல் இருக்கிறது.

நீங்கள் வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரிக்கு கூடுதலாக செலுத்தி இருந்தால் அந்த தொகையை ஐடிஆர் ஆவணங்களை எல்லாம் சரி பார்த்து விட்டு வருமானவரித்துறை உங்களுக்கே வழங்கும். ரீஃபண்ட் தொகையை தாமதமின்றிப் பெறுவதற்கு ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும்.

ITR  ரீஃபண்ட் எப்போது அக்கவுண்டுக்கு வரும்? ஈ-ஃபைலிங் இணையதளத்தில் 2 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்!

எப்போது ரீஃபண்ட் வழங்கப்படும்?: உங்களுடைய சம்பளத்திலிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலோ அந்த தொகை மீண்டும் உங்களுக்கே வழங்கப்படும். அதேபோல நீங்கள் முன்கூட்டியே வரி செலுத்தி அந்த வரி கூடுதலாக இருந்தாலும் ரீஃபண்ட் வழங்கப்படும்.

முதலில் உங்களுடைய ஐடிஆர் ஈ-வெரிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த செயல்முறையை செய்யாமல் இருந்தாலும் ரீஃபண்ட் கிடைக்காது. அதேபோல உங்களுடைய பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Also Read

தொகை எந்த கணக்கிற்கு வரவு வைக்கப்பட வேண்டுமோ அந்த வங்கி கணக்கை ஃப்ரீ வாலிடேட் செய்திருக்க வேண்டும். இதை வருமான வரி இணையதளத்திலேயே எளிதில் செய்து முடிக்கலாம். அதே போல நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது படிவம் 26ஏஎஸ் மற்றும் ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட் (AIS) ஆகியவற்றில் உள்ள தகவல்களும் நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்த தகவல்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதில் ஒரு தகவல்.. அதில் ஒரு தகவல் இருந்தாலும் ரீஃபண்ட் தொகை வருவதில் தாமதம் ஏற்படும். ஒரு சில நேரங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும் பிராசசிங் காரணமாக தாமதம் ஏற்படலாம். இதற்கு வரி செலுத்துபவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. வருமானவரித்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை வரை காத்திருக்க வேண்டும். இருந்தாலும் ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் தங்கள் தரப்பில் என்ன செய்ய வேண்டுமோ? அதை முன்கூட்டியே முடித்து விட்டால் பிரச்சினை இருக்காது.

ஆன்லைன் மூலம் ரீஃபண்ட் தொகையை ட்ராக் செய்வது எப்படி?:

ஸ்டெப் 1: முதலில் நீங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ஈ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். உங்களுடைய பான் கார்டு நம்பர் பாஸ்வோர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

ஸ்டெப் 2: உள் நுழைந்த பிறகு "e-File" என்ற பகுதிக்குச் சென்று, "Income Tax Returns" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "View Filed Returns" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 3: மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து "View Details" என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். டிஸ்ப்ளேவில் வருமான வரி விவரங்கள் மற்றும் ரீஃபண்ட் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை பார்க்கலாம்.

இதற்கு மற்றொரு வழியும் உண்டு. இணையதளத்தில் "Services" என்ற பகுதிக்குச் சென்று "Know Your Refund Status" என்பதைத் தேர்ந்தெடுத்தும் உங்களுடைய ரீஃபண்ட் தொகை இன்னும் ப்ராசசிங்கில் இருக்கிறதா? அல்லது வழங்கப்பட்டு விட்டதா? நிலுவையில் உள்ள வரிபாக்கியோடு அட்ஜஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்கலாம்.

ரீஃபண்ட் வர எவ்வளவு நேரம் எடுக்கும்?: பொதுவாக ஈ-வெரிஃபிகேஷன் செயல்முறையை நீங்கள் முடித்த பிறகு 4 முதல் 5 வாரத்திற்குள் தொகை வங்கி கணக்கிற்கு வந்துவிடும். குறைந்த தொகை உள்ளவர்களுக்கு பணம் இன்னும் சீக்கிரமாக வர வாய்ப்புள்ளது. கூடுதல் சரிபார்ப்பு தேவைப்படும் ஐடிஆர் படிவங்களுக்கு சற்று கூடுதல் காலம் எடுக்கலாம். சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டி ரீஃபண்ட் வர தாமதமானால் அதற்கு வருமான வரி துறை வட்டியையும் சேர்த்து வழங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+