சென்னை: தற்போது உலகம் முழுவதுமே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சாட் ஜிபிடி வருகையே இதற்கு முன்னோடியாக அமைந்தது என கூறலாம். சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் ஜெமினி ஏஐ சேவையை கொண்டு வந்தது.
ஏஐ செயலிகள்: ஜெமினி ஏஐ பயன்படுத்தி நாம் பல்வேறு சேவைகளை தானியங்கு முறைக்கு மாற்றிக் கொள்ளலாம். நாம் அனைத்து கூகுள் செயலிகளிலும் ஜெமினி ஏஐ பயன்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை பெற முடியும். அதே போல கூகுள் நிறுவனம் Veo3 என்ற ஏஐ அடிப்படையிலான ஒரு வீடியோ உருவாக்க செயலியையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்: ஜெமினி ஏஐ-யின் முழு பயனையும் பெற வேண்டும் என்றால் அதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுவாக இந்தியாவில் நாம் அனைத்து கூகுள் செயலிகளிலும் ஜெமினி ஏஐ வசதியை முழுமையாக பயன்படுத்த 19,500 ரூபாய் கட்டணம் செலுத்தி அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும். தற்போது கல்லூரி மாணவர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் இதனை இலவசமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெமினி அப்கிரேட் இலவசம்: கூகுள் இந்தியா நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கல்லூரி மாணவர்கள் இலவசமாக ஜெமினி அப்கிரேட் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. இது தொடர்பாக கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நீங்கள் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் என்றால் உங்களுக்கு தான் இந்த அறிவிப்பு" என தெரிவித்து இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அடுத்த ஓராண்டு காலத்திற்கு ஜெமினி அப்கிரேடை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எப்படி பெறுவது?: சாதாரணமாக ஒரு நபர் ஜெமினி ஏஐ அபிகிரேட் பெற வேண்டும் என்றால் 19,500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு கூகுள் இதனை இலவசமாக வழங்குகிறது என தெரிவித்திருக்கிறது. இந்த ஜெமினி அப்கிரேடுக்கு விண்ணப்பம் செய்யும் கல்லூரி மாணவர்கள் goo.gle/freepro என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களின் பெயர், நீங்கள் படிக்கும் கல்லூரி, வயது ஆகிய விவரங்களை வழங்க வேண்டும்.
2 டிபி ஸ்டோரேஜ்: கூகுள் ஒரு தனியார் நிறுவனத்திடம் இந்த விவரங்களை வழங்கி உண்மையிலேயே நீங்கள் கல்லூரி மாணவரா என்பதை சரிபார்த்து உங்களுக்கு ஓராண்டுக்கு இலவச ஜெமினி அப்கிரேடை வழங்கும். இத்துடன் Veo 3 வீடியோ ஜெனரேட்டிங் செயலியையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து கூகுள் செயலிகளிலும் ஜெமினி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இத்துடன் கூடுதலாக 2 டிபி ஸ்டோரேஜ் வசதியும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து ஜெமினி இலவச அப்கிரேடை பெற்று கொள்ளலாம் என கூகுள் கூறியிருக்கிறது. மாணவர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களை தேடுவது படிப்பது, அசைன்மெண்ட்களை முடிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஜெமினி ஏஐ வசதி பயன்படும் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications