பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி!! இந்த சலுகையை பெறுவது எப்படி?

இந்திய ரயில்வே பயணிகளுக்கு டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சலுகைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக இந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் டிக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்தாமல் விட்டு விடுகின்றனர். இதனால் கூடுதலாக பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர் .

குறிப்பாக உங்கள் வீட்டில் பள்ளி , கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் இருந்தால் இந்திய ரயில்வே வழங்கக்கூடிய இந்த சலுகையை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் அடுத்த முறை நீங்கள் வெளியூர் செல்லும் போது உங்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் பெரிய அளவு பணம் மிச்சமாகும் . பள்ளி கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் தங்களுடைய ரயில் டிக்கெட்டில் 50 லிருந்து 75% வரை தள்ளுபடி பெற முடியும் .

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி!! இந்த சலுகையை பெறுவது எப்படி?

ஆனால் ஐஆர்சிடிசி செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த சலுகை கிடைக்காது . நேரடியாக ரயில் நிலையங்களில் சென்று கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மட்டுமே மாணவர்களுக்கான இந்த தள்ளுபடி டிக்கெட் என்பது கிடைக்கும். உங்கள் வீட்டில் 12 இலிருந்து 25 வயதுக்குட்பட்ட பள்ளி ,கல்லூரிக்கு செல்லக்கூடிய பிள்ளைகள் இருந்தால் நிச்சயம் இந்த டிக்கெட் சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

பொது பிரிவு மாணவர்களுக்கு 50% தள்ளுபடியும் ,எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 75% தள்ளுபடியும் கிடைக்கும். உதாரணமாக சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு 500 ரூபாய் டிக்கெட் என வைத்துக் கொண்டால் 12 இலிருந்து 25 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 250 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம் இதுவே அவர்கள் எஸ்சி/எஸ்டி பிரிவு மாணவராக இருந்தால் 125 ரூபாய் செலுத்தினாலே போதும்.

ரயில்வே டிக்கெட் புக்கிங் கவுன்ட்டருக்கு சென்று மாணவ ,மாணவிகள் தங்களுடைய ஸ்டூடன்ட் ஐடி கார்டை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்த தள்ளுபடி டிக்கெட் கிடைக்கும். நீங்கள் சொந்த ஊரிலிருந்து வேறு ஊரில் வந்து படிக்கிறீர்கள் , வாரத்திற்கு ஒருமுறை உங்கள் ஊருக்கு செல்கிறீர்கள் அல்லது மாதம் ஒருமுறை உங்களுடைய சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்கிறீர்கள் எனும் போது இந்த டிக்கெட் தள்ளுபடி உங்களுக்கு பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும்.

ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 2nd seating டிக்கெட்டுகளில் மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். இதன்படி சொந்த கிராமத்தை விடுத்து வெளியூர்களில் வந்து படிக்கக்கூடிய மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கும் , பள்ளி கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதும் இந்த டிக்கெட் சலுகை கிடைக்கும் .

இது தவிர அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்கிறார்கள் எனும் போது ஆண்டிற்கு ஒரு முறை இரண்டாம் வகுப்பு பெட்டியில் 75 சதவீத சலுகையில் டிக்கெட் பெறலாம். அதேபோல கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் மெடிக்கல், இன்ஜினியரிங் போன்ற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை எழுதுவதற்கு தங்கள் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் பயணம் செய்தால் செகண்ட் கிளாஸ் டிக்கெட்டில் 75 சதவீத சலுகை பெற முடியும் இதற்கு அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமர்ப்பிக்க வேண்டும்.

யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி மெயின் தேர்வுகளில் பங்கேற்க செல்ல கூடிய மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும். மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வியை தொடர இந்த சலுகை வழங்கப்படுகிறது. அதே போல சென்னை போன்ற நகரங்களில் தினமும் ரயில் பயணம் செல்லும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+